2026 ஆம் ஆண்டு இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடருக்கு இலங்கை அணி நேரடியாகத் தகுதி – உறுதி செய்துள்ளது சர்வதேச கிரிக்கெட் பேரவை!
Saturday, March 16th, 2024
2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடருக்கு இலங்கை அணி நேரடியாகத் தகுதி பெற்றுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை உறுதி செய்துள்ளது.
2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரை இந்தியா மற்றும் இலங்கையில் நடத்த ஐசிசி தீர்மானித்துள்ளது.
அதற்கமைய, 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் தொடருக்கு இலங்கையும் இந்தியாவும் நேரடியாகத் தகுதி பெற்றுள்ளன.
குறித்த தொடரில் 20 அணிகள் பங்குபெறவுள்ள நிலையில், 12 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
கட்டாருக்கான இலங்கையின் புதிய தூதுவர் நியமனம்!
அரசியல் சாசனம் குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாடு விரைவில் அறிவிக்கப்படும் – மஹிந்த அமரவீர!
உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி - நாளை பரீட்சைகள் ஆரம்பம் - பரீட்சைகள் திணைக்கள...
|
|
|


