விவசாய சமூகத்தின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முன்னுரிமை – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளிப்பு!
Sunday, March 3rd, 2024
நாட்டை மீளக் கட்டியெழுப்புவதில் பல சவால்களைக் கடக்க வேண்டியுள்ள போதிலும், விவசாய சமூகத்தின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முன்னுரிமை அளிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.
திருகோணமலை – தம்பலகாமம், கலமெடியாவ பகுதியில் நெல் அறுவடையைக் கண்காணிக்கச் சென்றிருந்த சந்தர்ப்பத்தில், அவர் குறிப்பிட்டுள்ளார்.
பயிர்கள் ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட, போட்டித் தன்மைமிக்க விவசாயக் கைத்தொழில் துறையின் அவசியத்தைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நாட்டின் மிகப்பெரிய விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
70 ஆவது வரவுச் செலவு திட்டம் ஆரம்பம்!
கொழும்பிலிருந்து யாழ். சென்ற பேருந்து விபத்து - ஐவர் பலி, 30 பேர் படுகாயம்!
நாடாளுமன்றத்தில் பைத்தியக்காரர்கள்போல் நடந்துகொள்ள வேண்டாம் - சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன வலிய...
|
|
|


