விவசாயிகளுக்கு 657 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது – கமநல காப்புறுதி சபை தெரிவிப்பு!

2021 ஆம் ஆண்டு பெரும்போகத்தில் ஏற்பட்ட பயிர்ச்சேதங்களுக்காக விவசாயிகளுக்கு 657 மில்லியன் ரூபா நட்டஈடாக வழங்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது.
மேலும், 2021 ஆம் ஆண்டுக்கான சிறுபோக பருவத்தில் பயிர் சேதத்திற்கான இழப்பீடு வழங்கல் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் 2021 பெரும்போக பருவத்தில் 25 மாவட்டங்களில் 31,613 விவசாயிகளின் பயிர்கள் சேதம் அடைந்துள்ளதுடன், 42,934 ஏக்கர் பயிர்ச்செய்கை நிலம் சேதமடைந்துள்ளதாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
சூரியத்தகடுகள் அறிமுகம்!
நாளை வெள்ளிக்கிழமை முன்னிரவு 8 மணிமுதல் மீண்டும் முடக்கப்படுகின்றது இலங்கை - ஜனாதிபதி செயலகம் அறிவிப...
கொவிட் பரவலை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள் - பொதுமக்களிடம் கொரோனா செ...
|
|