சூரியத்தகடுகள் அறிமுகம்!

Friday, July 28th, 2017

சூரிய ஒளி மூலமான மின்சக்திக்கான சூரியத்தகடுகளை வர்த்தக ரீதியில் இலங்கையில் அறிமுகப்படுத்தத் தயாராக இருப்பதாக விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் ஆய்வுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

நிலைபேறான எரிசக்தித் திட்டத்தின் கீழ், வர்த்தக ரீதியில் சூரிய ஒளி மூலமான மின்சக்தி உற்பத்திக்கான சூரியத்தகடுகளை இதன் கீழ் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. தடிப்பான வைபர்களை கொண்டு தயாரிக்கப்படும் சூரியத்தகடுகள் இலங்கைக்கு பொருத்தமானதாக கருதப்படுகின்றது.

இந்த திட்டத்திற்குள் திறமையுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.  சீனா இதற்கான உதவிகளை வழங்கவுள்ளதுடன் அந்நாட்டில் வழங்கப்படும் தகவல்களுக்கமைவாக நிலைபேறான எரிசக்தியைப் பயன்படுத்தி, நவீன சூரிய ஒளி மின்னுற்பத்திக்கான சூரிய தகடுகள் தயாரிக்கப்படவுள்ளன.

Related posts: