விவசாயத் துறையை நவீனமயப்படுத்த பல மில்லியன் நிதி ஒதுக்கீடு!

Tuesday, February 19th, 2019

விவசாயத் துறையை நவீனமயப்படுத்தும் திட்டத்துக்கு 12,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த திட்டத்தின் ஊடாக விவசாயிகளின் உற்பத்திகளை கொள்வனவு செய்யும் நிறுவனங்கள் மற்றும் விவசாயிகளுக்கிடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இது தொடர்பான நிகழ்வு விவசாய அமைச்சில் அண்மையில் இடம்பெற்றது.

தேசிய உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு வர்த்தக சந்தையை அறிமுகப்படுத்துதல் தனியார் துறையினருடனான தொடர்புகளை மேம்படுத்தி விவசாயிகளுக்கிடையில் இடைதரகர்களின் தலையீட்டை கட்டுப்படுத்துவதற்கும் விவசாயிகளின் அறுவடைக்கு ஆகக்கூடிய விலையை பெற்றுக்கொடுப்பதும் இதன் நோக்கமாகும். இதேபோன்று விவசாயிகளுக்கு தேவையான சந்தை வசதிகளை மேம்படுத்துவதற்கும் உற்பத்தியின் போது நவீனதொழில்நுட்பத்தை பெற்றுக்கொடுப்பதுமே இந்த திட்டத்தின் மற்றுமொரு நோக்கமாகும்.

இந்த திட்டத்தின் கீழ் அந்தந்த மாவட்டத்திற்கான தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும். வடமாகாணத்தில் நிலக்கடலைக்கு டேவிட் கிரேம் நிறுவனமும் கிழக்குமாகாணத்தில் நிலக்கடலை கொள்வனவு செய்வதில் அமல் கிரேம் நிறுவனமும் வடமத்திய மாகாணத்தில் பப்பாசிக்கு ஹேலிஸ் நிறுவனமும் ஊவா மாகாணத்தில் பெஷன் ப்ருட்டுக்காக லங்கா கெனரிஸ் நிறுவனமும் வடமத்திய மாகாணத்தில் கோமரிக்கா ஸ்மெக் நிறுவனமும் கொள்வனவு நடவடிக்கையை மேற்கொள்ளும். அத்தோடு இதில் இரு தரப்பினரும் புரிந்துணர்வு உடன்படிக்கையை மேற்கொள்வர்.

இந்த உடன்படிக்கை ஊடாக இந்த மாகாணங்களில் தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளிடமிருந்து பெறப்படும் தரமான அறுவடைகளை இந்த நிறுவனங்கள் கொள்வனவு செய்யும். இதேபோன்று இந்த அறுவடைகளை உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் சந்தைப்படுத்துவதற்கும் இதன் மூலம் சந்தர்ப்பம் கிடைக்கும்.

இந்த திட்டகாலப்பகுதியில் ஆகக்கூடிய விலைகளின் கீழ் கொள்வனவுகளை மேற்கொள்ளுமாறும் அதன் மூலம் விவசாயிகளுக்கு ஆகக்கூடிய விலையை பெற்றுக்கொடுக்கும் வகையில் உடன்படிக்கையை மேற்கொள்ளுமாறும் விவசாய அமைச்சர் இதன்போது ஆலோசனை வழங்கினார்.

உற்பத்தியை பயனுள்ள வகையில் முன்னெடுத்தல் உற்பத்தி செலவை குறைத்தல் தற்பொழுது விவசாய வணிகமயம் வர்த்தகத்தை நோக்காக கொண்ட பயிர் உற்பத்தி போன்ற விடயங்கள் தொடர்பில் கூடுதலான கவனம் செலுத்த வேண்டும் என்றும் அமைச்சர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

Related posts: