கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை: ஏனைய நாடுகளை விட மேல் கோட்டில் இலங்கை!

Monday, March 23rd, 2020

மார்ச் மாதம் 11ஆம் திகதி கொரோனா தொற்றுக்கு இலக்காகிய முதலாவது இலங்கையர் அடையாளம் காணப்பட்டு இன்றுடன் 12 தினங்கள் கடந்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் நோயாளிகள் அடையாளம் காணப்படும் நாடுகள் வரிசையில் இலங்கை மோசமாக இருக்கும் பல நாடுகளை விட மேல் கோட்டில் இருப்பதாக தெரியவந்துள்ளது.

ஒப்பிட்டு பார்க்கும் போது முதல் தினத்தில் இலங்கை, அமெரிக்கா, இங்கிலாந்து, ஜேர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின், பெல்ஜியம், சுவீடன், அவுஸ்திரேலியா, கனடா, மலேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளை விட மேலே உள்ளது.

இந்த நாடுகளில் கொரோனா தொற்றிய முதல் நோயாளி அடையாளம் காணப்பட்டு 19 நாட்களின் பின்னரே அந்த வைரஸ் தொற்றிய நோயளிகள் அடையாளம் காணப்படுவது துரிதமாக அதிகரித்தது.

இத்தாலியில் முதல் அதிகரித்த வேகத்தை விட இலங்கை கீழ் இருந்தாலும் வைரஸ் தொற்றியவர்கள் அடையாளம் காணப்பட்ட முதல் 12 நாட்களில் ஏனைய பல நாடுகளை விட இலங்கை மேல் கோட்டில் இருப்பது கவனத்தில் கொள்ள வேண்டிய விடயம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையில் கடந்த ஜனவரி மாதம் 27ஆம் திகதி கொரோனா தொற்றிய சீனப் பெண் அடையாளம் காணப்பட்டார்.

Related posts: