குவைத்தில் சித்திரவதைக்கு உள்ளான பெருமளவு இலங்கையர்கள்!

Monday, July 22nd, 2019

குவைத் நாட்டில் பல்வேறு துன்பங்களை அனுபவித்த இலங்கை பணியாளர்கள் 30 பேர் மீண்டும் நாட்டிற்கு வருகைதந்துள்ளனர்.

அவர்களில் அதிகமானோர் குவைத்திலுள்ள பல்வேறு நிறுவனங்களில் தொழில் செய்துள்ளதாக தெரிய வருகிறது.

இருப்பினும் மர்ம கும்பல் ஒன்று இலங்கையர்களை கடத்திச் சென்று பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்த பின்னர் அவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டு வேறு இடத்தில் விட்டுச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் குறித்த இலங்கையர்கள் அனைவரும் அந்நாட்டு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்ட நிலையில், அவர்களை நாட்டுக்கு அனுப்புவதற்கு குவைத்திலுள்ள இலங்கை தூதரகம் நடவடிக்கை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

1,000 ரூபாயை சம்பளம் வழங்காவிட்டால் கம்பெனிகள் கையகப்படுத்தப்படும் - தோட்டக் கம்பெனிகளுக்கு அரசாங்கம...
தேவைப்பாடு வெகுவாக அதிகரிப்பு: பிராணவாயுவை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை - சுகாதார சேவைகள் பணிப்பாள...
சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நட்டஈடு - அனுமதி வழங்கியது .அமைச்சரவை !