மூடப்பட்டிருக்கும் வைத்தியசாலைகளை உடனடியாக திறக்குமாறு அமைச்சர் ராஜித சேனாரத்ன உத்தரவு!

Monday, January 30th, 2017

நாட்டில் வைத்திய சேவைகள் இடம்பெறாமல் தற்போது மூடப்பட்டிருக்கும் அனைத்து வைத்தியசாலைகளையும் உடனடியாக மீள திறக்குமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன பணிப்புரை விடுத்துள்ளார்.

அதற்கமைய குறித்த வைத்தியசாலைகளுக்கான புதிய வைத்தியர்களையும் உடனடியாக நியமிக்குமாறும் அவர் தெரிவித்துள்ளார். சுகாதார பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அமல் ஹர்ச டி சில்வாவிற்கே இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

நிறைவுகாண் வைத்தியர்கள் 332 பேருக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளமையால் மூடப்பட்டிருக்கும் அனைத்து வைத்தியசாலைகளையும் திறந்து வைத்தியர்களை நியமிக்குமாறும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

விசேடமாக குருதி சுத்திகரிப்பு நிலையங்கள் காணப்படும் வைத்தியசாலைகளுக்கு வைத்தியர்களை நியமிக்குமாறும் சுகாதார அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார். இதேவேளை, நாடளாவிய ரீதியிலுள்ள ஆயுர்வேத வைத்தியசாலைகளுக்கு தேவையான 212 தாதியர்களை சேவையில் இணைத்துக் கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தாதியர் பற்றாகுறை காரணமாக ஆயுர்வேத மருந்தகங்களின் சேவைகள் மந்தகதியில் முன்னெடுக்கப்படுவதாக மாகாண சுகாதார அமைச்சர்கள் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Rajitha-011

Related posts: