கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை இறுக்கமாக நடைமுறைப்படுத்துங்கள் – அனைத்து தொழிற்சாலை நிர்வாகங்களும் எச்சரிக்கை விடுத்துள்ளார் சுகாதார அமைச்சர்!

Wednesday, October 14th, 2020

நாட்டிலுள்ள அனைத்து தொழிற்சாலை நிர்வாகங்களும் சுகாதார திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்ட சுகாதார பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்குமாறு சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி வலியுறுத்தியுள்ளார்.

தொழிற்சாலை நிர்வாகங்கள் ஒரு நாளில் குறைந்தது மூன்று தடவையாவது தொழிலாளரின் காய்ச்சலைப் பரிசோதிக்க வேண்டும். அத்துடன் அவர்களது தங்குமிடம் மற்றும் நெருக்கமான தொடர்புகளையும் பரிசோதிக்க வேண்டும்.

அத்துடன் போக்குவரத்தில் நெரிசலைக் குறைக்க தொழிற்சாலைகளில் வேலை நேரங்களையும் சிப்ட் முறைகளையும் தொடர்ந்து மாற்றுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன்  தொழிலாளர்களின் முகவரிகளை உடனடியாக புதுப்பிக்குமாறும் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கட்டுநாயக்க, பியகம சுதந்திர வர்த்தக வலயங்களிலுள்ள தொழிலாளர்களுக்கு இலவசமாக பிசிஆர் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் தொழிற்சாலை நிர்வாகங்கள் தொழிற்சாலைப் பகுதிகளை கண்டிப்பாக தனிமைப்படுத்துமாறும் கொவிட் 19 பரவலைத் தடுக்க வெளியார் உள்ளிடுவதைத் தடை செய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: