விளையாட்டுத் துறையினூடாகவே நற்குணங்களை வளர்த்தெடுக்க முடியும் – ஐங்கரன்.

Wednesday, June 7th, 2017

இன்றைய இளைய சமூகம் விளையாட்டுத் துறையில் வளர்ச்சி காணும்போதுதான் எதிர்காலத்தில் ஆரோக்கியமானசமுதாயமாகமாற்றம் காணமுடியுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்  வலி. கிழக்கு பிரதேச நிர்வாகச் செயலாளர் இராமநாதன் ஐங்கரன் தெரிவித்துள்ளார்.

வலி. கிழக்கு அச்செழு மலர்மகள் விளையாட்டுக் கழகத்திற்கு விளையாட்டு உபகரணங்களை அண்மையில் கையளித்துகருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறுதெரிவித்தார்.

இளைஞர்கள் தேகாரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு நாளாந்தம் மாலை நேரங்களில் விளையாடுவது நல்லது.

விளையாட்டினூடாகவே அவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளல், விட்டுக் கொடுப்பு, மதிப்பளிக்கும் தன்மை போன்ற நற்குணங்களை வளர்த்துக்கொள்ளமுடியும். அதனடிப்படையில் தான் எமது கட்சியும் இளைஞர்களின் வளமான எதிர்காலத்திற்கான பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுத்துவருகின்றது.

இவ்வாறானசெயற்றிட்டங்களுக்குகட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா முழுமையான ஒத்துழைப்பையும், ஒத்தாசைகளையும் வழங்கிவருகின்றார் என்றும் சுட்டிக்காட்டினார்.

இதனடிப்படையிலேயே; டக்ளஸ் தேவானந்தாவிடம் மலர்மகள் விளையாட்டுக்கழகம் விடுத்தகோரிக்கைக்கு அமைவாக விளையாட்டுஉபகரணங்களைவழங்கிவைக்கின்றோம் என்றும் ஐங்கரன் மேலும்தெரிவித்தார்.

Related posts: