பல்கலைக்கு இணைத்துக்கொள்ளப்படவுள்ள மாணவர்க்களுக்கான கடிதங்கள் அனுப்பி வைப்பு!

Monday, October 17th, 2016

2015, 2016 கல்வி ஆண்டுக்கு பல்கலைக்கழகங்களில் இணைந்து கொள்ளப்படவுள்ள தகுதி பெற்ற மாணவர்க்களுக்கான உரிய கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பல்கலைக் கழகங்களுக்குத்தகுதி பெற்றுள்ள மாணவர்களை பதிவு செய்வதற்கான கால அவகாசம் எதிர்வரும் 21ம் திகதியுடன் நிறைவடைதாகவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அனைத்து மாணவர்களும் எதிர்வரும் 21ம் திகதிக்கு முன்னர் இணையத்தளத்தின் ஊடாக பதிவு செய்து கொள்ள வேண்டுமென்று ஆணைக்குழுவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர்  தெரிவித்தார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 21ம் திகதிக்கு பின்னர் நிலவும் வெற்றிடங்கள் பூர்த்தி செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

வைத்திய மற்றும் பொறியியல் பீட மாணவர்களின் பதிவுகள் தற்போது பூர்த்தியடைந்துள்ளன. இவர்களது பெயர் பட்டியல் பல்கலைக்கழகங்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

கலை, வர்த்தகம், உயிரியல், பௌதீகவியல் ஆகியவற்றுக்கு மேலதிகமாக இந்த வருடத்தில் புதிய கற்கை நெறிகள் இரண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பொறியியல் தொழில்நுட்பம், உயிரியல் கட்டமைப்பு தொழில்நுட்பம் ஆகியன இவையாகும். இதற்கு மேலதிகமாக புதிய கற்கைநெறிகள் ஏழும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றுக்காக இரண்டாயிரத்து 75 மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்பட உள்ளனர்.

UgcLogoL

Related posts: