நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாதிருக்க நடவடிக்கை – அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Tuesday, November 16th, 2021

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டாலும் நாட்டில் எந்தவித எரிபொருள் தட்டுப்பாடும் ஏற்படாமல் இருப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் பிரச்சினை தொடர்பில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தைக் குறைந்தது 50 நாட்களேனும் மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து நாட்டின் பல பாகங்களில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நேற்றைய தினம் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தமையை காணக்கூடியதாக இருந்தது.

இந்நிலையில் நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் குறித்த விடயம் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்ட போதிலும் எரிபொருள் விலையை அதிகரிப்பது தொடர்பில் தீர்மானம் எட்டப்படவில்லையெனவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: