விலைகள் அதிகரிக்கும் பட்சத்தில் அதற்கான மாற்று வழிகளை அரசாங்கம் மேற்கொள்ளும் – வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவிப்பு!
Friday, July 9th, 2021
எதிர்வரும் வாரங்களில் கோதுமை மா தயாரிப்பிலான உணவு பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதென வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவ்வாறு விலைகள் அதிகரிக்கும் பட்சத்தில் அதற்கான மாற்று வழிகளை அரசாங்கம் மேற்கொள்ளும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இதன் ஒருகட்டமாக அதிகுறைந்த விலையில் நூடில்ஸ், தேங்காய் எண்ணெய் போன்றவற்றை சந்தைக்கு அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வடக்குக்கான புகையிரத சேவைகள் பாதிப்பு!
பலாலி விமானத்தளத்திற்காக சுவீககரித்த காணிகளுக்கு இழப்பீடு!
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்க காத்திருப்போருக்கான விசேட அறிவித்தல்!
|
|
|


