விரைவில் சாரதி அனுமதிப் பத்திரம் மொபைல் தொலைபேசிகளில் அறிமுகம் – மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவிப்பு!

மொபைல் தொலைபேசிகளின் ஊடாக சாரதி அனுமதிப் பத்திரம் வழங்கும் முறை வகுக்கப்படும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த வேலைத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல் தற்போது இடம்பெற்று வருவதாக திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த புதிய முறை நடைமுறைப்படுத்தப்பட்டதன் பின்னர் சாரதி அனுமதிப் பாத்திரத்திற்கு அட்டை தேவையில்லை எனவும், அது மொபைல் தொலைபேசிக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும், தேவைப்படுபவர்கள் அட்டையை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
சாரதி அனுமதிப் பத்திரம் அச்சிடுவதில் தாமதம் ஏற்படுவதாகவும், மொபைல் தொலைபேசிகளுக்கு வழங்குவதனுடாக அது மிகவும் வசதியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
கொரோனா தாக்கம்: இறந்தவர்களின் எண்ணிக்கை மீள ஆராயப்படும் - உலக சுகாதார அமைப்பு தெரிவிப்பு!
புதிய வரித் திருத்த யோசனையை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்!
வடக்கில் முடக்கப்பட்டுள்ள பிரதேசத்தில் மேலும் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள்!
|
|
யாழ்.மாநகரின் அபிவிருத்திகள் யாவும் முன்னுரிமையுடன் கூடிய தேவைகளின் அடிப்படையிலேயே முன்னெடுக்கப்பட வ...
மின் கட்டணம் உயர்ந்தால் அதிகாரிகளின் வீடுகளும் தீக்கிரையாக்கப்படும் - நாடாளுமன்றில் எச்சரிக்கை விடுத...
அதியுச்ச பாதுகாப்பு வளையத்துள் கொழும்பு - 12 ஆம் திகதிக்கு பின்னர் நாட்டின் ஆட்சிப்பொறுப்பு மாறக்கூ...