புதிய வரித் திருத்த யோசனையை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

Wednesday, March 17th, 2021

புதிய வரி திருத்த யோசனையை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், இது தொடர்பிலான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய விவசாய பயிர்களுக்கு 14 வீதம், தகவல் தொழிநுட்பத்திற்கான வரி 14 வீதம் மற்றும் இரத்தினங்கள் மற்றும் நகைகள் ஏற்றுமதிக்கான 14 வீத வரி முற்றாக நீக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இரத்தினம் மற்றும் தங்க உள்ளூர் விற்பனைக்கான 28 வீத வரி 14 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் கட்டுமானத்திற்கான வரி 28 வீதத்திலிருந்து 14 வீதமாகக் குறைக்கப்பட்டுள்ளதுடன்  மதுபானம், புகைப்பொருட்கள் என்வற்றுக்கான 40 வீத வரியில் மாற்றமெதுவும் செய்யப்படவில்லை என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: