யாழ்.மாநகரின் அபிவிருத்திகள் யாவும் முன்னுரிமையுடன் கூடிய தேவைகளின் அடிப்படையிலேயே முன்னெடுக்கப்பட வேண்டும் – முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா!

Friday, June 22nd, 2018

யாழ்.மாநகரசபையால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திப் பணிகள் ஒவ்வொன்றும் மக்களின் தேவைகளுக்கேற்ப முன்னுரிமை அடிப்படையிலும் தேவைகளை அறிந்தும் மேற்கொள்ளப்பட வேண்டும். அத்தகைய ஒரு பொறிமுறையை மேற்கொள்வதனூடாகவே யாழ்.மாநகரின் அபிவிருத்தி பணிகளை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல முடியும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் யாழ்.மாநகர சபையின் மாதாந்த அமர்வு முதல்வர் ஆர்னோல் தலைமையில் ஆரம்பமானது. இதன்போது யாழ்.மாநகரின் உள்ளக வீதிகள் புனரமைப்பு, மின்சார விளக்குகள் பொருத்துதல், சனசமூக நிலையங்கள் அபிவிருத்தி ஆகிய தேவைப்பாடுகளுக்காக 65 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான சபையின் அங்கீகாரத்திற்கு விடப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா சபையிலுள்ள 45 உறுப்பினர்களதும் பங்களிப்புடன் இந்த திட்டங்கள் முன்னெடுக்கப்படவேண்டும் என்பதுடன் அவை தேவைகளை அறிந்தும் முன்னுரிமை அடிப்பிடையிலும் மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவித்தார்.

இதற்கு முதல்வர் ஆர்னோல்ட் தெரிவுகளின் அடிப்படையிலேயே அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படும் என்று தெரிவித்தமையால் முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா அபிவிருத்திகள் யாவும் முன்னுரிமையின் அடிப்படையிலும் மக்களின் தேவைகள் கருதியுமே மேற்கொள்வது நலனளிக்கும் என சுட்டிக்காட்டியிருந்தார்.

Related posts: