குளிரான காலநிலை வடக்கில் இரு வாரங்கள் நீடிக்கும்!

Sunday, January 20th, 2019

வடக்கில் குளிரான காலநிலை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கும் என்றும் இதன்போது சுவாசம் தொடர்பான நோய்கள், உடலில் அசௌகரியங்களும் ஏற்படும் எனவும் இதனால் குளிரைத் தாங்கக் கூடிய உடைகளை அணிந்திருக்குமாறும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

வடக்கின் பெரும்பாலான பகுதிகளில் அதிகுறைந்த வெப்ப நிலையின் அளவு 18.5 பாகை செல்சியசாகக் காணப்பட்ட அதேவேளை அதிகூடிய வெப்பநிலை 29 பாகையாகக் காணப்பட்டது.

அடுத்துவரும் தினங்களுக்கும் இதே நிலமை தொடரும். பனிப்பொழிவின் ஒரு வடிவமான (மிஸ்ட்) மாலை 4 மணிக்கு ஆரம்பிக்கின்றது. மறுநாள் காலை 7.30 மணிவரை தொடரும். இதனால் இரவு மற்றும் அதிகாலை வேளைகளில் நடமாடும்போது குளிரைத் தாங்கக் கூடியவாறு பாதுகாப்பு எற்பாடுகளை மேற்கொள்வது சிறந்தது.

Related posts: