விமான நிலையம் மூடப்படாது – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அறிவிப்பு!

நாட்டில் நிலவும் தற்போதைய சூழ்நிலையை கருத்திற்கொண்டு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் மூடப்படாது என்று சுற்றுலாத்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் கடுமையான சுகாதார அறிவுறுத்தல்களின் விமான நிலைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றாறும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருபவர்களை விசேட திட்டத்தின் ஊடாக தனிமைப்படுத்தும் முறை அமுல்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விமான நிலையம் பொதுமக்களுக்கு திறக்கப்படவில்லை என்றாலும், பயணிகளுக்கு திறக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஆரம்பமானது கூட்டு எதிர்க்கட்சியின் பாதயாத்திரை!
வடக்கு - கிழக்கில் மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிப்பதற்கு சாத்தியம் - புவியியல் துறை சிரேஷ்ட விரிவுரை...
நெருக்கடி நிலை காரணமாக சுற்றுலா பயணிகளின் வருகை 60 வீதம் வீழ்ச்சி - சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை ...
|
|