ஆரம்பமானது கூட்டு எதிர்க்கட்சியின் பாதயாத்திரை!
Thursday, July 28th, 2016
“மக்கள் போராட்டம்” எனும் தொனிப் பொருளின் கீழ் கூட்டு எதிர்க் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் நடைபவனி கண்டி கெடம்பே பிரதேசத்திலிருந்து ஆரம்பமாகியுள்ளது.
குறித்த பாதயாத்திரை கண்டி தலதா மாளிகையின் முன்னால் ஆரம்பமாகவிருந்த போதிலும் அதற்கு நேற்று நீதிமன்றம் தடை விதித்து தீர்ப்பளித்திருந்தது. இதனால் இன்று கண்டியில் ஆரம்பமாகும் இந்த நடைபவனி மாவனல்லை வரையிலும் இடம்பெறவுள்ளது.
நாளை ( 29) மீண்டும் மாவனல்லையிலிருந்து நெலுந்தெனிய வரை செல்லவுள்ளது. மூன்றாவது நாளில் (30) நெலுந்தெனியவிலிருந்து நிட்டம்புவ வரையிலும், நான்காவது நாளான 31 ஆம் திகதி நிட்டம்புவயிலிருந்து கிரிபத்கொட நகர் வரையிலும் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஐந்தாவது நாளில் (01) கிரிபத்கொட நகரிலிருந்து கொழும்பு வரை நடைபவனி செல்லவுள்ளதாக கூட்டு எதிர்க் கட்சி அறிவித்துள்ளது.
Related posts:
மறவன்புலோவில் தற்கொலை அங்கி வைத்திருந்த நபர் கிளிநொச்சியில் கைது!
கொரோனா வைரஸானது 18 முதல் 24 மாதங்கள் வரை நீடித்திருக்கக்கூடியது – இதன் தாக்கம் 2022 வரை காணப்படும்!
மாவட்ட மூலக்கிளை தெரிவுகளில் நீண்டகால அங்கத்தவர்கள் புறக்கணிப்பு - தமிழரசு கட்சியின் தலைமை பதவிக்கும...
|
|
|


