சுகாதார சேவையை மேம்படுத்த வெளிநாட்டு முதலீடு!
Thursday, March 15th, 2018
சுகாதார சேவையை 2020ம் ஆண்டு வரையில் மேம்படுத்துவதற்காக 36 ஆயிரத்து 500 கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டு முதலீட்டுச் செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
இந்த வெளிநாட்டு முதலீட்டுச் செயற்திட்டங்கள் இந்தியா ஐரோப்பிய நாடுகள் அமெரிக்கா அவுஸ்திரேலியா சீனா ஜப்பான் போன்ற அபிவிருத்தியடைந்த நாடுகளிடம் இருந்து கிடைக்கப்பெற்றுள்ளதாக சுகாதார போஸாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த முதலீட்டுத் தொகை சலுகைக் கடன் அடிப்படையிலும் நிதியுதவியாகவும் கிடைக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணி ஆரம்பம்!
சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடுவோர் குறித்து அவதானமாக இருங்கள்!
கொரோனா வைரஸ் : இலங்கையில் எச்சரிக்கப்படும் பகுதிகள்!
|
|
|


