கொரோனா வைரஸ் : இலங்கையில் எச்சரிக்கப்படும் பகுதிகள்!

Wednesday, March 18th, 2020

இலங்கையில் மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் கொரோனா வைரஸின் தாக்கம் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, குறித்த பகுதிகள் கொரோனா அச்ச நிலை பிரதேசங்கள் என தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இத்தாலி உட்பட வெளிநாடுகளில் இருந்து வந்த 6000க்கும் அதிகமானோர் வீடுகளில் அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் 3460க்கும் அதிகமானோர் முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

எப்படியிருப்பினும் ஆபத்தான பகுதிகளாக கண்டறியப்பட்ட குறித்த பகுதிகளில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு சங்கத்தின் தலைவர் உபுல் ரேஹன தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று பரவும் ஆபத்துக்கள் அதிகமாக உள்ளமையினால் விசேடமாக குறித்த பகுதிகளில் உள்ளவர்கள் 14 நாட்கள் மக்களுடன் ஒன்றுகூட வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இதுவரை 43 கொரோனா வைரஸ் தொற்றிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Related posts: