சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடுவோர் குறித்து அவதானமாக இருங்கள்!

Tuesday, December 25th, 2018

வடக்கின் பாதுகாப்பு நிலமை மோசமாகியுள்ளது. மக்கள் வீடுகளில் பாதுகாப்புத் தேவைப்பாடுகளோடு முடங்கியிருக்க வேண்டிய சூழல் உருவாகிவருகிறது. பொது நிகழ்வுகளுக்குச் செல்லும்போது தங்களின் உடமைகள் குறித்தும் வீட்டின் பாதுகாப்பு நிலை குறித்தும் சிந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்ற திருட்டுச் சம்பவங்கள் இதையே இடித்துரைத்து நிற்கின்றன.

பழைய பொருள்கள் கொள்வனவு செய்வோர், ஆலயங்களின் புனரமைப்புப் பணிகளுக்கு நிதி திரட்டுவோர் மற்றும் மருத்துவத் தேவைகளுக்கு பண உதவிகளை நாடி வருவோர் என பல்வேறு தரப்பினர் அன்றாடம் வீடுகளுக்கு வந்து செல்கின்றனர். இவர்களுள் யார் நல்லவர்கள்? யார் கெட்டவர்கள் என்பதை உணர்ந்து அறியமுடியவில்லை.

தெல்லிப்பழையில் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டோர் காவியுடை தரித்தவர்களாக இனங்காணப்பட்டுள்ளதால் தற்போது காவியுடை தரித்து வருகின்ற ஏனையவர்கள் மீதும் மக்கள் சந்தேகம் கொள்ளவேண்டிய அவலநிலை தோன்றியுள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் வீடுகளில் உள்ளவர்கள் தமது பாதுகாப்பைத் தாமே உறுதி செய்துகொள்ள வேண்டும். பகல் பொழுதில் வீடுகளின் கதவுகளைத் தேவையற்ற வகையில் திறந்து வைத்திருப்பதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடுவோர் குறித்து அவதானத்துடன் இருக்க வேண்டும். அயலவர்களோடு நல்லுறவைப் பேணிக்கொள்ள வேண்டும். ஆபத்து என்று உணர்ந்து கொண்டால் விரைந்து அவர்களுடைய உதவியை நாட வேண்டும். திருட்டு நிகழ்ந்த பின்பு நடந்தவைகள் குறித்து அழுவதால் பயனில்லை. பிரதேச ரீதியில் பாதுகாப்புக் கடமையில் பொறுப்பாக இருக்கின்ற பொலிஸ் பிரிவுகள் இவ்வாறான திருட்டு நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவது குறித்து முன்னாயத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம்.

Related posts: