விமானத்தில் தீ விபத்து – மத்தள விமான நிலையத்தில் பதற்றம்!
Wednesday, December 26th, 2018
மத்தள சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்படிருந்த CVK 7042 என்ற விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
எனினும் விமான நிலையத் தீயணைப்பு படையினரால் தீ கட்டுபாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
குறித்த விமானம் நேற்று மாலை தாய்லாந்திலிருந்து மத்தள விமான நிலையத்தில் தரையிறங்கியதுடன், இன்று காலை ஓமான் நோக்கி புறப்பட்ட தயாரான போதே தீப்பரவியுள்ளது.
குறித்த விமானத்தில் 7 அலுவலக பணியாளர்கள் இருந்த போதிலும் எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லையென்றும், குறித்த தீப்பரவலுக்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் மத்தள விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related posts:
ஜப்பானால் இலங்கைக்கு பல மில்லியன் பெறுமதியான அம்புலன்ஸ் வண்டி நன்கொடை!
மிகக் குறுகிய நாளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மக்களிடம் அடிவாங்கும் - வடக்கு மாகாண சபையில் அன்ரனி ஜ...
எல்லைத்தாண்டிய தமிழக மீன்பிடியாளர்களின் படகு விபத்து - நீர்ல் மூழ்கிய இருவர் மீட்பு - ஒருவர் மாயம்!
|
|
|


