ஜப்பானால் இலங்கைக்கு பல மில்லியன் பெறுமதியான அம்புலன்ஸ் வண்டி நன்கொடை!

Wednesday, July 20th, 2016

ஜப்பான் – இலங்கை நட்புறவு நிறுவனம், 35 மில்லியன் பெறுமதியான நோயாளர் காவு வண்டியை (ambulance) இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.

ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் வைத்து நேற்றுமுன்தினம் இந்த வண்டி வழங்கப்பட்டுள்ளது. ஜப்பான் – இலங்கை நட்புறவு நிறுவனத்தின் உறுப்பினர் Toji Eiichi இந்த நன்கொடையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கியுள்ளார்.

இதன் போதே ஜனாதிபதி இந்த வண்டியை இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு வழங்கியுள்ளார்.பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் ஜப்பான் – இலங்கை நட்புறவு நிறுவனம் தலைவர் மற்றும் பலர் இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts:

3 ஆம் திகதி வரை மழை தொடரும்; 9ஆம் திகதி மற்றொரு தாழமுக்கம் – யாழ் பல்கலைக்கழக புவியற்துறை விரிவுரையா...
அரச அதிகாரிகளுக்கான தொலைபேசி கொடுப்பனவுகள் குறைப்பு - 5,000 ரூபா மாதாந்த கொடுப்பனவை அரச சார் நிறுவன ...
நிலையான வைப்பு வசதி வீதம் மற்றும் நிலையான கடன் வசதி வீதம் ஆகியவற்றை குறைக்க தீர்மானம் - மத்திய வங்கி...