அரச அதிகாரிகளுக்கான தொலைபேசி கொடுப்பனவுகள் குறைப்பு – 5,000 ரூபா மாதாந்த கொடுப்பனவை அரச சார் நிறுவன ஊழியர்களுக்கும் வழங்க அரசாங்கம் நடவடிக்கை!

Sunday, January 23rd, 2022

அரசாங்கம், வரவு – செலவுத்திட்ட தீர்மானங்களை கடைப்பிடித்து இந்த மாதம்முதல் அரசுக்கு சொந்தமான நிறுவன அதிகாரிகளின் தொலைபேசி கட்டண கொடுப்பனவுகளை குறைத்துள்ளது.

அதன்படி, சபைகள் மற்றும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களில் உள்ள அதிகாரிகளின் தொலைபேசி கட்டணங்கள் 25 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது.

ஒரு மாதத்திற்கு அதிகபட்சமாக .13,000 ரூபாவை தொலைபேசி கட்டண உதவித்தொகையாக பெற்ற அதிகாரி ஒருவர் புதிய முறைப்படி 9,750 ரூபாவை மாத்திரமே பெறுவார்.

தலைமைச் செயல் அதிகாரி, நிர்வாக பணிப்பாளர், , பொது மேலாளர் ஆகியோருக்கு முன்னர் 10 ஆயிரம் ரூபா வழங்கப்பட்ட நிலையில், தற்போது அது, 7500 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

இதேபோல், தலைமை நிதி அதிகாரி, தலைமைச் செயல்பாட்டு அதிகாரிகள் முன்னர் 9ஆயிரம் ரூபாவை பெற்று வந்த நிலையில், குறைப்பின்படி 6750ரூபாவை பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே

அரசாங்க ஊழியர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்ட 5,000 ரூபா மாதாந்த கொடுப்பனவை அரச சார் நிறுவன ஊழியர்களுக்கும் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

குறிப்பாக கூட்டுத் தாபனங்கள், அதிகார சபைகள், அரச நிறுவன ஊழியர்கள் உள்ளிட்ட அரச சார்பு ஊழியர்களுக்கும் இக்கொடுப்பனவை வழங்க தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஜனவரி 01 ஆம் திகதிமுதல் இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு சுற்றுநிருபம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: