மின் விநியோக மார்க்கங்களின் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை மின் தடை!
Wednesday, July 27th, 2016
மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை வியாழக்கிழமை (28-07-2016) காலை -8.30 மணி முதல் மாலை-5.30 மணி வரை மின் விநியோகம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாண மின் பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, உடுப்பிட்டி வீதி, நாச்சிமார் கோவிலடி, எள்ளங்குளம், இலந்தைக்காடு, கொற்றாவத்தை, பொலிகண்டி, ஆலடி, நெடியகாடு, வெல்ல றோட், உடுப்பிட்டி மகளிர் கல்லூரி, உடுப்பிட்டி நாவலடி, வன்னிச்சி அம்மன் கோவிலடி, கம்பர் மலை, பழைய பொலிஸ் நிலையம், வல்வெட்டித்துறை, உடுப்பிட்டி வாசிகசாலை, வல்லை வீதி, பொக்கணை, கெருடாவில், தொண்டைமானாறு, மயிலியதனை, அக்கரை பாரதி வீதி ஆகிய இடங்களில் மின் விநியோகம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
யாழ்ப்பாண பாரம்பரிய விதைகள் பேராதனையில் - மாவட்ட செயலக விவசாயப்பிரிவு தெரிவிப்பு!
கொரோனா தொடர்பில் அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கம் !
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு! இந்தியாவில் பதில் விரைவில் - ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு!
|
|
|


