யாழ்ப்பாண பாரம்பரிய விதைகள் பேராதனையில் – மாவட்ட செயலக விவசாயப்பிரிவு தெரிவிப்பு!

Wednesday, May 15th, 2019

யாழ். மாவட்டத்தில் உள்ள பாரம்பரிய மரக்கறி இனத்தின் விதைகள் பேராதனை ஆய்வு கூடத்தில் சேகரிக்கப்பட்டுள்ளன என்று மாவட்டச் செயலக விவசாயப்பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது:

யாழ்ப்பாண மாவட்டத்தில் சில பயிர்கள் தனித்துவம் கொண்டவையாக உள்ளன. இவை காலம் காலமாக சில பிரதேசங்களில் பயிரிடப்பட்டு வருகின்றன. புதிய இனங்கள் அதிக விளைச்சல் கொண்ட இனங்கள் அறிமுகப் படுத்தப்பட்டு வரும் தற்காலத்தில் பாரம்பரிய இனங்கள் அழிவடைந்து செல்லும் நிலை ஏற்பட வாய்ப்புண்டு. இதனைக் கருத்தில் கொண்டு பெரதெனியாவில் உள்ள துறை சார்ந்த ஆய்வு கூடத்தில் இவற்றை சேகரிப்பதற்காக அந்தக்குழு யாழ்ப்பாணம் வந்தது.

கோப்பாய், சாவகச்சேரி, உடுவில் போன்ற பல்வேறு பிரதேசங்களில் பாரம்பரியமாகப் பயிரிடப்பட்டு வரும் மிளகாய், கத்தரி போன்ற சுமார் 20 இற்கும் அதிகமான விதை இனங்களை சேகரித்துள்ளது. இவை முறையாக ஆய்வு கூடத்தில் பராமரிக்கப்படும். பாரம்பரிய இனத்தின் பயிர்கள் தேவைப்படும் போது அதனை அங்கிருந்து பெற்றுக்கொள்ள முடியும். இதனால் எமது பாரம்பரிய இனத்தின் இருப்பு பாதுகாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

Related posts: