விதிமுறைகளை மீறிய 50 பேருந்துகளின் பயண அனுமதிப்பத்திரம் இரத்து – போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிப்பு!
Wednesday, December 30th, 2020
உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத 50 பேருந்துகளின் பயண அனுமதிப்பத்திரங்கள் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
அத்துடன் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத பேருந்துகள் தொடர்பில் அரசாங்கம் தொடர்ந்து கவனம் செலுத்துவதாகவும் போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஜனவரி மாதம்முதல் சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடும் நடவடிக்கை இராணுவத்தினரால் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கொரோனா தொற்றுக்கு மத்தியில் யாழ்ப்பாணத்தை அச்சுறுத்திவரும் மற்றொரு நோய்த் தொற்று - எச்சரிக்கை விடுத்...
முதலாம் திகதிமுதல் பாடசாலை மாணவர்களுக்காக தனியார் பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்தி, புதிய பேருந்து சே...
இலங்கையில் 30 ஆயிரத்துக்கும் அதிகமான சிறுவர்கள் யாசகம் பெறுகின்றனர் - பேராதனை பல்கலைக்கழகத்தின் பேரா...
|
|
|


