கொரோனா தொற்றுக்கு மத்தியில் யாழ்ப்பாணத்தை அச்சுறுத்திவரும் மற்றொரு நோய்த் தொற்று – எச்சரிக்கை விடுத்துள்ளார் பிரதிப் பணிப்பாளர் சி.யமுனாநந்தா!

Monday, November 9th, 2020

யாழ் மாவட்ட மக்கள் கொரோனா அச்சுறுத்தலுக்கு முகங்கொடுத்து சுகாதார நடைமுறைகளை பேணிவரும் நிலையில் தற்போது அதிகரித்துவரும் மற்றொரு தொற்றான உண்ணிக் காய்ச்சல் தொடர்பிலும் மிகுந்த அவதானம் தேவையென யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சி.யமுனாநந்தா எச்சரித்துள்ளார்.

அண்மைய நாட்டிளில் பரவிவரும் உண்ணிக் காய்ச்சல் நோய் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர் –

தற்பொழுது கொரோனா நோய்த்தொற்று பரவிவரும் காலத்தில் எமது பிரதேசத்தில் உண்ணிக் காய்ச்சல் என்ற ஒருவித பக்டீரியா காய்ச்சலுடன் பலர் சிகிச்சைக்கு வருகிறார்கள். அதிகமாக வயல் வேலை செய்பவர்கள், தோட்ட வேலை செய்பவர்கள் உண்ணிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகிறார்கள்.

உண்ணிக் காய்ச்சல் என்பது ஒரு வைரஸால் ஏற்படுகின்றது. இது பொதுவாக தெள்ளினால் பரப்பப்படுகின்றது. பொதுவாக எலிகள், அணில், நாய், பூனை மற்றும் மிருகங்களில் காணப்படலாம்.

தெள்ளு உடலில் கடித்து அந்தக் கிருமி உடலுக்குள் செல்வதால் இந்த நோய் ஏற்படுகின்றது. இதன்போது காய்ச்சல், உடல் நோ காணப்படும். இந்த நோய்க்கு உரிய சிகிச்சையினை உடனடியாக அளிக்கப்பட வேண்டும். அத்துடன் இந்த நோய்க் கிருமிக்குரிய சிகிச்சை மிகவும் சுலபமானது. வைரஸ் எதிர்ப்பு மருந்தைக் கொடுப்பதன் மூலம் இதனை கட்டுப்படுத்தலாம். எனவே உண்ணிக் காய்ச்சலுக்கு பயப்படத் தேவையில்லை என்று தெரிவித்த பிரதிப்பணிப்பாளர் ஜமுனானந்தா உண்ணிக் காய்ச்சல் மரணத்தையும் ஏற்படுத்தலாம். எனவே இது தொடர்பான விழிப்புணர்வு தற்போதைய காலகட்டத்தில் மிகவும் இன்றியமையாதது என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: