தமிழ் மக்களுக்கு தலைமைத்துவமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கிடைத்திருப்பது பெரும் வரப்பிரசாதம் – பருத்தித்துறை பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவர் புகழாரம்!

Monday, December 4th, 2023

வடக்கு மாகாண மக்களின் அனைத்து பிரச்சினைகளையும் கையாளும் ஒரேயொரு தலைமைத்துவமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  கிடைத்திருப்பது எமது மக்களுக்கு கிடைத்த பெரும் வரப்பிரசாதமாகுமென பருத்தித்துறை பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்

வடமாகாணத்துக்கான பலநோக்கு கூட்டுறவு சங்களின் ஆணையாளர்கள் சமாச தலைவர்கள் கிளைக்குழு உறுப்பினர்களின் குறைககேள் சந்திப்பு கிளிநொச்சி மாவட்ட திறன் விருத்தி பயிற்சி நிலைய மண்டபத்தில் நேற்று (3)  நடைபெற்றது.

அதில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் மேலும் கூறுகையில் -.

வடக்கிலுள்ள அனைத்து பலநோக்கு கூட்டுறவு சங்கங்களின் கிளைகள் ஊடாக குறைந்த விலையில்  சீனியை மக்களுக்கு பெற்றுக் கொடுக்கவென 100 மெற்றிக் தொன் சீனியை வர்த்தக அமைச்சருடன் அமைச்சர்  டக்ளஸ் தேவானந்தா ஏற்பாடு செய்திருந்த நிலையில்  இதனை பங்கீட்டு அடிப்படையில் குறைந்த விலையில்  மக்களுக்கு விநியோகிப்பதற் கான ஏற்பாடுகள்  குறித்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது..  

இன்று  நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப்பதவியை எடுத்துக் கொள்ள வேண்டுமெனின் அவரது கட்சி குறைந்தது நான்கு அல்லது ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களையாவது கொண்டிருக்க வேண்டும்.

ஆனால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  அவர்களின் அரசியல் அணுகு முறையும் அவரது நீண்டகால அனுபவமும், மத்தியில் அரசுடன் பேணிவரும் இணைந்த ஒரு தனித்துவமான வேலை வழிமுறையின் ஊடாக தனது மக்களுக்கு தன்னாலான முடிந்த உதவிகளை அரசிடம் இருந்து பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற அவரது அயராத முயற்சியின் பலனாகவே இந்த அமைச்சு பதவியும் அதனூடான அவரது சேவையும் இன்று எமக்கு கிடைத்திருக்கிறது. 

இந்த அரிய வாய்ப்பை எமது மக்களுக்காக தொடர்ந்து  பாதுகாத்து பேணி அதன் நன்மைகளை எமது கூட்டுறவு அமைப்புக்கள் ஊடாக எவ்வாறு முன்னெடுக்க விருக்கிறோம்   என்பதிலேயே எமது  கூட்டுறவின் எதிர்கால வெற்றி தங்கியுள்ளது என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

தனது அமைச்சு கடற்றொழில் சார்ந்திருக்கின்ற நிலையில் வடக்கின் அனைத்து திணைக்களங்கள் துறைகள் சார்ந்து மக்கள் எதிர்கொள்ளும் எல்லாப் பிரச்சினைகளையும் கையாளும் ஒரேயொரு தலைமைத்துவமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எமக்கு கிடைத்திருப்பதை ஒரு சாதாரண விடயமாக நாம் கருதிவிட முடியாது என்பதையும் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

இன்று 330/- ரூபா சில்லறை விலைக்கு சீனி விநியோகிக்கப்பட்டு வரும் நிலையில் 280/- ரூபாவுக்கு சீனியை எமது கிளைகள் ஊடாக விநியோகிக்க  அமைச்சர் அவர்கள் ஏற்பாடுகளை  மேற்கொண்டிருப்பது எமது சங்க கிளைகளின் எதிர்கால வளர்ச்சிக்கான நல்ல ஒரு ஆரம்பமாகவே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: