விடுவிக்கப்பட்ட காணிகளில் பயன்தரு மரங்களையாவது நடுங்கள்; யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத்த தளபதி கோரிக்கை!
Saturday, May 16th, 2020
படையினரால் விடுவிக்கப்பட்ட காணிகளின் உரிமையாளர்கள் பலர் மீள்குடியமராமல் இருப்பது கவலையளிக்கிறது. குடியமராவிடினும் மக்கள் தமது காணிகளில் பயன்தரு மரங்களை நட்டு பயன்பெறவேண்டுகின்றேன் என யாழ்ப்பாணம் மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் வணிகசூரிய தெரிவித்தார்..
அவர் மேலும் தெரிவித்ததாவது;
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் முப்படையினர் வசமிருந்த பெருமளவு காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. அவை உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. தற்போது இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியன பொதுமக்களின் மிகக் குறைதளவான காணிகளிலேயே முகாமை அமைத்து உள்ளன.
எனினும் விடுவிக்கப்பட்ட காணிகள் பலவற்றின் மக்கள் மீள்குடியமரவில்லை. அவர்களது காணிகள் படையினரிடமிருக்கும் போது செழிப்பாக இருந்தன. எனினும் இப்போது பராமரிப்புகளற்று பற்றைக் காணிகளாக உள்ளன.
எனவே மக்கள் தற்போது மீள்குடியமராவிடினும் காணிகளை பராமரித்து பயன்தரு மரங்களை நடவேண்டும் தென்னை மரங்களை நடுவதனால் சில வருடங்களில் நல்ல பயனைப் பெற முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|
|


