யாழ் மாவட்டத்தில் வறட்சியினால் அதிகளவு மக்கள் பாதிப்பு!
Monday, March 27th, 2017
வறட்சியான காலநிலை காரணமாக யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் பலர் குடிநீர் பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளனர். இவர்களுக்கான குடிநீர் வசதிகள் பவுசர்கள் மூலம் விநியோகிக்கப்படுவதாக நிலையம் அறிவித்துள்ளது.
மேலும் வறட்சியான காலநிலை காரணமாக 14 மாவட்டங்களில் இரண்டு இலட்சத்து 55 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த 40 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
Related posts:
ரயில் விபத்துக்களை தடுக்க நீண்டகால பாதுகாப்புத் திட்டம்!
இலங்கைக்கு வெளியிலிருந்து முன்வைக்கப்படும் நல்லிணக்க கட்டமைப்பை ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை - அரசாங்கம...
நீரில் மூழ்கி ஒவ்வொரு வருடமும் 800 மரணங்கள் பதிவு - சுகாதார அமைச்சு தகவல்!
|
|
|


