நாளைமுதல் மழை அதிகரிக்கும் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Sunday, January 29th, 2023

நாளை (30) முதல் நாடு முழுவதும் மழை அதிகரிக்கும் சாத்தியம் அதிகமாக காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, நாளைமறுதினம் (31) மற்றும் பெப்ரவரி முதலாம் ஆம் திகதி நாடளாவிய ரீதியில் பல இடங்களில் சுமார் 150 மில்லிமீற்றர் வரையான கடும் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் அந்த திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

பிற்பகல் அல்லது இரவு வேளையில் நாட்டின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின்போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களை வளிமண்டலவியல் திணைக்களம் கோரியுள்ளது.

வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு கடற்பிராந்தியத்திற்கு மேலாக தாழமுக்கம் நிலைகொண்டுள்ளதுடன், நாளை மறுதினம் மேலும் தீவிரமடைந்து வங்காள விரிகுடாவின் தென்மேற்கு பகுதியில் நிலைகொள்ளும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இதனால் குறித்த பகுதிகளுக்கு எதிர்வரும் 24 மணித்தியாலயங்களுக்கு கடற்றொழிலாளர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: