வாக்காளர் பெயர்பட்டியல் விவரம் அடுத்தவாரம் இணையதளத்தில்!

2016ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் விவரங்களை எதிர்வரும் 6ஆம் திகதியளவில் இணையதளத்தில் பார்வையிட முடியும் என்று தேர்தல் திணைக்கள தெரிவித்தள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
வாக்காளர் பெயர்ப்பட்டியல் பதிவுகள் கிராம அலுவலர்களின் ஊடாகப் பெறப்பட்டுள்ளதாகவு அவை தொடர்பில் கிராம அலுவலர்களுக்கு வாக்காளர்களின் விவரங்கள் தொடர்பில் வரைவுகள் அனுப்பப்பட்டு, அவற்றில் ஏதாவது பிழைகள் அல்லது திருத்தங்கள் இருப்பின் அவைகள் திருத்தப்பட்டன. இந்த மாத நடுப்பகுதியில் அல்லது மாத இறுதியில் இந்த ஆண்டுக்கான வாக்காளர்களின் விவரங்கள் முழுமைபடுத்தப்படும்.
வாக்காளர்களின் விவரங்கள் வெளியிட்ட பின்னர் எவ்வித மாற்றங்களையும் செய்ய முடியாது என்ற காரணத்தால் விவரங்கள் மிக உன்னிப்பாக அவதானிக்கபடுகின்றது.
இணையதளத்தில் பிரசுரிக்கப்பட்ட பின்னர் வாக்காளர் பட்டியலில் ஏதாவது பிழைகள் இருப்பின் பிரதேச கிராம அலுவலரின் உதவியுடன் அவற்றைத் திருத்திக்கொள்ள முடியும். எனவே வாக்காளர் பட்டியல் இறுதிப்படுத்தப் படுவதற்கு முன்னர் அனைவரும் தங்களது வாக்காளர் பட்டியலில் தவறுகள் இருப்பின் திருத்திக்கொள்வது கட்டாயமாகும் என்று தேர்தல்கள் திணைக்கள அதிகாரி தெரிவித்துள்ளனர்.
Related posts:
|
|