வளிமாசடைவதை அளவிடும் கருவியை பொருத்த நடவடிக்கை!

நகரங்களை அண்டிய பகுதியில் வளிமாசடைவதை அளவிடும் கருவியை பொருத்தும் வேலைத் திட்டத்தை மத்திய சுற்றாடல் அதிகார சபை ஆரம்பித்துள்ளது.
இதற்கமைய தற்போது கொழும்பு மற்றும் கண்டி பிரதேசங்களில் குறித்த கருவிகள் அமைக்கப்பட்டுள்ளதாக, மத்திய சுற்றாடல் அதிகார சபையின், சுற்றுச்சூழல் பாதிப்பை கட்டுப்படுத்தும் பிரதி பணிப்பாளர் கே.எச்.முத்துகுடஆராச்சி தெரிவித்துள்ளார்.
அதிகளவில் வாகனங்களில் இருந்து வெளியாகும் புகைகளின் ஊடாகவே வளி அதிகளவில் மாசடைகிறது.
இந்த நிலையில், வளி மாசடைவதை அளவிடுவதற்கான கருவிகளை தற்போது நாடளாவிய ரீதியில் பொருத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
மாணவர்களுக்கான பண வவுச்சர் விநியோகம் பூர்த்தி!
இலங்கைக்கு அருகே காற்றழுத்த தாழ்வு!
அரசின் அத்தியாவசியமற்ற 100 நிறுவனங்களுக்கு மூடுவிழா!
|
|