மாணவர்களுக்கான பண வவுச்சர் விநியோகம் பூர்த்தி!

Tuesday, November 15th, 2016

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாணவர்களுக்கான சீருடைக்கான பண வவுச்சர் விநியோகம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளர் திஸ்ஸ ஹேவாவிதாரண  தெரிவித்துள்ளார்.

கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளர் திஸ்ஸ ஹேவாவிதாரண இது தொடர்பாக தெரிவிக்கையில் எதிர்வரும் 15ம் 16ம் திகதிகளில் அனைத்து பாடசாலைகளுக்குமான சீருடைக்கான வவுச்சர் விநியோகப் பணிகள் பூர்த்தி செய்யப்படுமென்று தெரிவித்தார்.

நேற்று இவை வடமத்திய மாகாணத்திற்கு விநியோகிக்கப்பட்டன.  இன்று மேல்மாகாணத்திற்கும் இவை விநியோகிக்கப்பட உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார். பாடசாலை விடுமுறைக்கு முன்னதாக இந்த வவுச்சர்கள் பாடசாலை மாணவர்களை சென்றடைய வேண்டுமென்பது இலக்காகுமென்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த வவுச்சர்களில் சம்பந்தப்பட்ட மாகாணம், மாவட்டம், பாடசாலை ஆகியவற்றின் விபரங்கள் குறிக்கப்பட்டுள்ளன. பகிரங்க சந்தையில் உத்தியோகபூர்வ சீருடைக்கான புடவையைப் பெற்றுக் கொள்ள முடியும். கடந்த வருடத்திலும் பார்க்க இந்த பண வவுச்சரின் பெறுமதி இம்முறை அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

இதேவேளை பாடசாலை பாடப்புத்தக விநியோக நடவடிக்கையில் 59 சதவீதம் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக நூல் வெளியீட்டு ஆணையாளர் பத்மினி நாலிகா வெலிவத்த தெரிவித்தார்.

இன்றும் இவை விநியோகிக்கப்பட உள்ளன. அனைத்து மாகாண சபைகளுக்கும் ஒரே முறையில் பாடப்புத்தகங்கள் விநியோகிக்கப்படுகின்றன. தரம் 2, தரம் 8ற்கான பாடப்புத்தகங்கள் புதிதாக அச்சிடப்பட்டுள்ளதாகவும் ஆணையாளர் பத்மினி நாலிகா வெலிவத்த  கூறினார்.

2c0f9cd5421e43a9670cd5b8a0387fc9_XL

Related posts: