விமானியற்ற பறக்கும் இயந்திரங்கள்: நெறிமுறைகள், சட்டப்பிரமானங்கள் மற்றும் வழிகாட்டல்கள்!

Tuesday, January 10th, 2017

ஆகாயத்திலிருந்து படம் எடுப்பதற்கு பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கை பின்வருமாறு.

விமானியற்ற பறக்கும் இயந்திரங்கள் (UAVs) பொதுவாக ஆங்கிலத்தில் Drone என்று அழைக்கப்படுவதுண்டு. சமீப காலமாக இந்த பறக்கும் இயந்திரங்கள் வர்த்தக மற்றும் தனியார் பயன்பாட்டுக்காக பயன்படுத்தப்படுகின்றன. இலங்கையில் யுத்தம் முடிவடைந்த பின்னர் ஆகாயத்தில் பறப்பதற்கு அமுலில் இருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை அடுத்து இத்தகைய விமானியற்ற பறக்கும் இயந்திரங்கள் மூலம் நாட்டுப் பிரஜைகளும் உல்லாசப் பயணிகளும் இலங்கையில் முக்கியமான இடங்களை படம் எடுத்து வருவது எமது அமைச்சுக்கு நன்கு தெரியும். இந்த காட்சிகள் சமூக ஊடகத்தளங்கள் மூலமும் Online Video படங்கள் மூலமும் பொதுவாக வெளியிடப்படுகின்றன. இவ்விதம் பல நிகழ்வுகள் ஒரு நிறுவனத்தின் பிரச்சார செயற்பாடுகளுக்காக அல்லது ஒரு நிகழ்வை நேரடியாக ஒளி,ஒலிபரப்புவதற்கு பயன்படுத்தப்படுவது எமக்கு நன்கு தெரியும். இவை சுகாதார மேம்பாடுகளுக்காகவும் சரியான இடத்தை இலக்கு வைத்து விவசாயம் அதாவது சிறிய அடிப்படையிலான கமநல செய்கைகளில் ஈடுபடுவதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் ஆபத்துக்கள் நெருங்கும் போது இவை ஆகாயத்தில் இருந்து படம் எடுப்பதற்கு பயன்படுத்தப்படுகின்றன. விளையாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் திருமண நிகழ்வுகள், கொண்டாட்ட ஒன்று கூடல்கள் போன்ற தனியார் நிகழ்வுகளையும் ஆகாயத்தில் இருந்து படம் எடுப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றன.

இலங்கையில் இவ்விதம் விமானியற்ற பறக்கும் இயந்திரங்கள் பாவனையாளர்களுக்கு கூடுதலாக பயன்படுகின்றன. இத்தகைய நவீன ஆளில்லாத பறக்கும் இயந்திரங்களை பயன்படுத்துவதற்கான கட்டணம் குறைந்து வருவதனால் ஊடகத்துறை அமைச்சு இத்தகைய பறக்கும் இயந்திரங்கள் வர்த்தக செயற்பாடுகளுக்காகவும் பொழுது போக்கு நடவடிக்கைகளுக்காகவும் ஊடகத்துறையின் மேம்பாட்டுக்காகவும் பயன்படுத்தலாம் என்று கருதுகிறது. ஊடகத்துறை அமைச்சு ஊடகவியலாளர்களும் ஊடகத்துறையில் சம்பந்தப்பட்டவர்களும் இத்தகைய விமானியில்லாத பறக்கும் இயந்திரங்களை பயன்படுத்தும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளது. தொழில் ரீதியாக செய்திகளை திரட்டுவதற்கு பயன் தரக்கூடியதாகவும் பல்வேறு பொது நிகழ்வுகளை ஆகாயத்தில் இருந்து பதிவு செய்வதற்கும் இவை பேரூதவியாக அமைகின்றது. தற்போது இத்தகைய விமானியில்லாத பறக்கும் இயந்திரங்களின் பயன்பாடு அதிகரித்து வருவதனால் இந்த தொழில்நுட்ப துறையை ஊடகத்துறையின் மெம்பாட்டுக்காக பயன்படுத்துவதற்கு நடவடிக்கைகளை எடுப்பதை தனது கடமையாக அமைச்சு கருதுகின்றது. தற்போது நடைமுறையிலுள்ள சட்டங்கள் மற்றும் சட்ட பிரமானங்களை உள்ளடக்க கூடியவகையில் இந்த விமானியில்லாத பறக்கும் இயந்திரங்களை பயன்படுத்தும் போது அதனை பாதுகாப்பாகவும் நெறி முறைகளுக்கு அமையவும், பிரஜைகளின் தனிப்பட்ட இரகசிய தன்மைக்கு மதிப்பளிக்க கூடிய வகையிலும் செயற்படுத்த அமைச்சு தக்க முடிவுகளை எடுக்கும்.

இது தொடர்பாக சமீப மாதங்களில் ஊடகங்கள் வெளியிட்ட பலதரப்பட்ட செய்தி அறிக்கைகள், குறிப்பாக ஹம்பாந்தோட்டையில் ஏற்பட்ட மோதல்கள் தொடர்பாக விமானியில்லாத பறக்கும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டமை குறித்து அமைச்சின் கவனம் திரும்பியுள்ளது. இலங்கையில் ஊடகத்துறையினர் விமானியில்லாத பறக்கும் இயந்திரங்களை பயன்படுத்துவதன் அவசியத்தை வழியுறுத்தும் அமைச்சு, ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இத்தகைய பறக்கும் இயந்திரங்களை 2016ம் ஆண்டு பெப்ரவரி மாதம், இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை விடுத்த ஊயு-ஐளு-2016-புநுN-001 சட்டப்பிரமானங்களுக்கு அமைய இவற்றை பயன்படுத்த வேண்டும் என்று வழியுறுத்துகின்றது. இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை தனது இணையத்தளத்;தில் விமானியற்ற பறக்கும் இயந்திரங்களை பயன்படுத்துவதற்கான விதிமுறைகளை விளக்கியுள்ளது. எனவே இவ்விதம் விமானியற்ற பறக்கும் இயந்திரங்களை பயன்படுத்தும் ஊடகவியலாளர்கள் இந்த சட்ட பிரமானங்களை நன்கு வாசித்து அதற்கு அமைய செயற்பட வேண்டும்.

பிரதான தகவல்கள் இவ்விதம் உள்ளடக்கப்பட்டுள்ளது,

  • 25 கிலோ கிராம் நிறையை விட கூடிய விமானியற்ற பறக்கும் இயந்திரங்கள் இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர் நாயகத்தின் அனுமதியின்றி பயன்படுத்தலாகாது.
  • ஒரு கிலோ கிராமுக்கும் 25 கிலோ கிராமுக்கும் இடைப்பட்ட நிறையுடைய விமானி இல்லாத பறக்கும் இயந்திரம் ஒன்றை சமூகத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஒருவர் அல்லது அங்கீகரிக்கப்பட்ட ஒரு அமைப்பு சிவில் விமான போக்குவரத்து பணிப்பாளர் நாயகத்தின் அங்கீகாரத்துடன் பயன்படுத்தலாம்.
  • ஒரு கிலோ கிராமுக்கும் குறைந்த நிறையுடைய விமானி இல்லாத பறக்கும் இயந்திரம் ஒன்றை சிவில் விமான போக்குவரத்து பணிப்பாளர் நாயகத்தின் அனுமதியின்றி பயன்படுத்தலாம். இவை ஒரு தனியாருக்கு சொந்தமான இடத்தில் அல்லது ஒரு பொது இடத்தில் அப்பகுதியிலுள்ளவர்களுக்கும், சொத்துக்களுக்கும் ஆபத்து ஏற்படாத வகையில் பொழுது போக்கு நிகழ்ச்சிகளுக்கும் கல்வி நிகழ்ச்சிகளுக்கும் பயன்படுத்தலாம்.
  • விமானியற்ற ஒரு பறக்கும் இயந்திரத்துக்கென கொடுக்கப்படும் அடையாள இலக்கம், அதன் உரிமையாளரின் தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் அவரை தொடர்பு கொள்ள வேண்டிய விபரங்களை உள்ளடக்கும் அடையாள முத்திரையொன்று இந்த இயந்திரத்தில் பொறிக்கப்படும்.
  • எத்தகைய நிறையையும் உடைய விமானியற்ற பறக்கும் இயந்திரங்கள் சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகத்தின் விசேட அங்கீகாரத்துடன் மாத்திரமே வாடகைக்கு அல்லது ஒருவருக்கு சன்மானமாக உதவுவதற்கு பயன்படுத்த முடியும். இத்தகைய ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சம்பந்தப்பட்டவர்கள் இதற்கான வாடகைக்கான கட்டணத்தை குறிப்பிட்டு தனித்தனியாக விண்ணப்பங்களை செய்து அங்கீகாரத்தை பெற வேண்டும்.
  • தறையிலுள்ளவர்களுக்கு எந்த வகையிலும் ஆபத்தை ஏற்படுத்தாத வகையில் எந்த நிறையையும் உடைய விமானியற்ற பறக்கும் இயந்திரமொன்றின் செயற்பாட்டு வலு, அதற்கு எங்கிருந்து சக்தி வழங்கப்படுகின்றது, அதனை எவ்விதம் கட்டுப்படுத்த முடியும் போன்ற சகல விபரங்களையும் எடுத்துரைத்து அதற்கு பின்னரே அவற்றை சாதாரண பயன்பாட்டுக்கு சேர்த்துக் கொள்ள முடியும்.
  • பின்வருவோர் விமானியற்ற பறக்கும் இயந்திரம் ஒன்றை பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.
  1. இந்த பறக்கும் இயந்திரத்தை பயன்படுத்த தெரியாதவர்கள் அல்லது அதனை பாதுகாப்பாக பயன்படுத்த முடியாதவர்கள்.
  2. நல்ல உடல் ஆரோக்கியமும் மனோநிலையும் இல்லாதவர்கள் பயன்படுத்த முடியாது.
  3. மதுபோதையில் உள்ளவர்கள் அல்லது உளநல ரீதியில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய பொருட்களை பயன்படுத்துபவர்கள் மற்றும்
  4. சமூக பொறுப்புணர்வு இல்லாதவர்கள்.
  • விமானியற்ற ஒரு பறக்கும் இயந்திரம் ஒரு விமான நிலையத்தின் எல்லையிலிருந்து 05 மைல் தொலைவிற்கு உட்பட்ட பகுதியில் 400 அடிக்கு கூடுதலான உயரத்தில் பறப்பது தடை செய்யப்பட்டுள்ளது. இந்த உயரத்தில் பறப்பதற்கும் சிவில் விமான போக்குவரத்து சபை பணிப்பாளர் நாயகத்தின் அனுமதியினை பெற வேண்டும்.
  • சிவில் விமான போக்குவரத்து பணிப்பாளர் நாயகத்தின் எழுத்து மூல அங்கீகாரம் இன்றி விமானியற்ற விமானமொன்றை இலங்கையில் எந்த பகுதியிலும் பயன்படுத்த முடியாது.
  1. எந்தவொரு விமான நிலையத்துக்கும் அருகிலோ விமான இறங்கு தரைக்கு அருகிலோ இதனை பயன்படுத்த முடியாது.
  2. பொது கூட்டமொன்று நடைபெறும் இடங்களிலும் பயன்படுத்த முடியாது.
  3. சன நெருக்கம் கூடுதலான இடத்திலும் பயன்படுத்த முடியாது.
  4. ஒரு நெடுஞ்சாலையின் மீதோ அல்லது ரயில் பாதையின் மீதோ பயன்படுத்த முடியாது.
  5. அதி சக்திவாய்ந்த மின்சார இணைப்பு வயர்களுக்கு மேலாகவும் அவற்றுக்கு கீழாகவும் இவற்றினை பறக்க விட முடியாது.
  6. தொலைத்தொடர்பு கோபுரங்களுக்கு அருகிலும் பயன்படுத்த முடியாது.
  7. தேசிய பூங்காக்கள் பாதுகாக்கப்பட்ட பிரதேசங்கள் அல்லது பாதுகாப்பு அமைப்புக்கள் உள்ள பகுதியில் இவற்றை பயன்படுத்த முடியாது.
  • விமானியற்ற பறக்கும் இயந்திரங்களை இவ்விடங்களில் பயன்படுத்தலாகாது.
  1. எந்தவொரு காணிக்கு மேலாகவும் அக்காணியில் குடியிருப்பவர்கள் அல்லது அக்காணியின் உரிமையாளரின் அனுமதியின்றி இவற்றை பறக்க விட முடியாது.
  2. மூன்றாவது நபருக்கு அல்லது கட்டிடங்களுக்கு அல்லது பொருட்களுக்கு ஆபத்து அல்லது சேதம் ஏற்படுத்தக்கூடிய வகையில் பயன்படுத்த கூடாது.
  • சிவில் விமான போக்குவரத்து பணிப்பாளர் நாயகத்தின் அங்கீகாரமின்றி இந்த பறக்கும் இயந்திரங்களில் இருந்து எந்தவொரு பொருளையும் தறையில் வீசக் கூடாது. அத்துடன், அதில் ஏதாவதொரு சுலோகங்கள் எழுதப்பட்ட கொடிகளையும் பறக்க விடக்கூடாது.
  • விமானியற்ற பறக்கும் இயந்திரங்களை பயன்படுத்துவோர் எப்போதும் அவதானமாக இருக்க வேண்டும்.
  1. இந்த பறக்கும் இயந்திரம் ஆகாயத்தில் செல்வதை தறையில் இருந்து அவதானிக்க கூடியதாக இருக்க வேண்டும்.
  2. அருகிலுள்ள விமான நிலையத்தில் விமானமொன்று பறப்பதை இதன் மூலம் அவதானிக்க கூடாது.
  3. இந்த பறக்கும் இயந்திரத்தை மேகங்களை விட தாழ்வாக பறக்க விட வேண்டும்.
  • விமானியற்ற பறக்கும் இயந்திரம் ஒன்று சிவில் விமான போக்குவரத்து பணிப்பாளர் நாயகத்தின் விசேட அனுமதியின்றி எந்த வகையான பறக்கும் போட்டிகளிலும் கலந்து கொள்ளலாகாது.
  • விமானியற்ற பறக்கும் இயந்திரம் மாலைப்பொழுதில் இருந்து காலை வரை (இரவில்) பயன்படுத்தலாகாது.

குறிப்பாக CAASLS இவ்விதம் விமானியற்ற பறக்கும் இயந்திரங்களை அவற்றை தறையிலிருந்து இயக்கும் இயக்குபவர் பார்க்க கூடியவாறு இருக்க வேண்டும். சமீபத்தில் நடந்த ஹம்பாந்தோட்டை மோதலின் போது ஒரு தொலைக்காட்சி நிலையத்தின் விமானியற்ற பறக்கும் இயந்திரமொன்று அதனை கீழே இருந்து இயக்கியவர் அவதானிக்க முடியாத தூரத்துக்கு பறந்து சென்று படம் எடுத்தமை தெரிய வந்துள்ளது.

ஊடகத்துறை அமைச்சு இவ்விடயத்தில் சிவில் போக்குவரத்து அதிகாரசபையுடனும் ஏனைய இது தொடர்பான அமைப்புக்களுடனும் எதிர்காலத்தில் ஒன்றிணைந்து இவ்விதம் விமானியற்ற பறக்கும் இயந்திரங்களை அங்கீகரிக்கப்பட்ட ஊடகங்கள் பிரச்சினையின்றி பயன்படுத்துவதற்கான நெறியான நடைமுறையில் சட்ட பிரமானங்களை தயாரிக்கவுள்ளது. பொதுவான ஊடக அமைப்புக்களுடன் தொடர்பற்ற பாரிய ஊடக சமூகத்தினருடனும் இவ்விதம் இணைந்து செயற்பட விரும்புகிறோம். ஊயுயுளுடு உடன் இணைந்து செயற்படக் கூடிய அமைப்புக்களுக்கு இதற்கான அங்கீகாரத்தை பெற்றுக் கொடுக்கவும் நாம் விரும்புகிறோம். இவ்விதம் விமானியற்ற பறக்கும் இயந்திரங்களை பயன்படுத்துவது பற்றிய விழிப்புணர்வை எடுத்துக் காட்டுவதற்காக இவற்றுக்கான விதிகள் சட்டப்பிரமானங்கள் பற்றியும் விளக்கிக் கூற ஊடக அமைச்சு விரும்புகின்றது. இதற்கென பயிற்சி பாசறைகள் உட்பட புரிந்துணர்வு செயற்பாடுகளை சம்பந்தப்பட்ட தரப்பினருடன் மேற்கொள்வதற்கும் இந்த பறக்கும் இயந்திரங்களை இறக்குமதி செய்பவர்கள் மற்றும் தயாரிப்பவர்கள், வர்த்தக தொழில் துறையினருடனும் ஊடக சமூகத்தினருடனும் இணைந்து செயற்பட உள்ளது.

ஊயுயுளுடு சட்ட பிரமானங்களுக்கு மேலதிகமாக ஊடக அமைச்சு நெறிமுறைகள் மற்றும் தொழில் ரீதியான வழிகாட்டல்களையும் ஞாபகப்படுத்த விரும்புகிறது. ஊடக சுதந்திரம் மற்றும் சமூக பொறுப்புணர்வு தொடர்பாக பத்திரிகை ஆசிரியர்கள் அமைப்பின் கொழும்பு பிரகடனம் செய்த நெறிமுறைகளையும் வழிகாட்டல்களையும் எடுத்துக் காட்டுவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளோம். ஊடக துறையில் கடைப்பிடிக்கப்படும் நெறிமுறைகள் விமானியற்ற பறக்கும் இயந்திரங்களை பயன்படுத்தும் ஊடகத்துறைக்கும் ஏற்புடையது என்பதை நாம் ஞாபகப்படுத்த விரும்புகிறோம். இது தொடர்பான அரசாங்க திணைக்களங்களுடனும் பிரதான பத்திரிகையாளர்களுடனும் விமானியற்ற பறக்கும் இயந்திரங்களை பயன்படுத்தும் ஊடகவியல் நிபுணர்களுடனும் அமைச்சு கலந்துரையாடி விமானியற்ற பறக்கும் இயந்திரங்களை பயன்படுத்தும் சர்வதேச தரத்தையும் நெறிமுறைகளையும் கொண்ட வழிகாட்டல்களை தயாரிக்க உள்ளது.
இவ்விதம் விமானியற்ற பறக்கும் இயந்திரங்களை விளையாட்டு பொருட்களாக பயன்படுத்துபவர்களும் இந்த விழிப்புணர்வை புரிந்து கொள்ள வேண்டும் என்று நாம் கேட்டுக் கொள்ள விரும்புகிறோம். இந்த பறக்கும் இயந்திரங்கள் தவறான முறையில் பயன்படுத்தப்பட்டால் சிலரை துன்புறுத்தக் கூடிய வகையிலும் காயப்படுத்தக் கூடிய வகையிலும் இருக்கும். சரியான முறையில் இவற்றை பயன்படுத்த தவறுபவர்களுக்கு எதிராக வழக்கு தொடர முடியும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். நெறிமுறைகளை கௌரவிப்பதனால் மற்றவர்களின் இரகசிய தன்மைகளை பாதுகாக்க கூடியதாகவும் அவர்களின் பாதுகாப்பிற்கும் நீங்கள் உத்தரவாதம் அளிக்கக் கூடிய வகையில் இந்த பறக்கும் இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்றோம்.

ஊடகவியலாளர்கள் அனைவரும் ஊயுயுளுடு சட்ட பிரமானங்களை அவதானமாக வாசித்து அத்துடன் நாம் உங்களுக்கு கொடுக்கும் விழிப்புணர்வு குறிப்புக்களையும் பயன்படுத்தி அவ்வமைப்பின் விமானியற்ற பறக்கும் இயந்திரங்களை பயன்படுத்துவது தொடர்பான அறிவுரைகளையும் கவனத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும். இது தொடர்பாக மேலதிக விளக்கங்கள் தேவைப்பட்டால் தயவு செய்து எங்களுடன் தொடர்பு கொள்ளவும். இதன் மூலம் இலங்கையில் ஊடகத்தொழில் ரீதியான கலாச்சாரம் ஒன்றை உருவாக்க முடியும்.

அ.ஹில்மி முஹம்மத்
தகவல் பணிப்பாளர்
அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகத்துக்கு பதிலாக

359402d85b12e3ee40371ccbe8534160_XL

Related posts: