வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தூசுப் படிமங்கள் இன்றுமுதல் குறைவடையும் – வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிப்பு!

Friday, December 9th, 2022

வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தூசுப் படிமங்கள் இன்று வெள்ளிக்கிழமைமுதல் குறைவடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மெண்டௌஸ் சூறாவளியினால் இந்தியாவில் இருந்து தூசுத் துணிக்கைகள் அதிகளவில் நாட்டில் சூழ்ந்துள்ள நிலையில், நாடளாவிய ரீதியில், அதிக குளிருடனான வானிலை நிலவுகின்றது.

இந்த நிலையில், நாடளாவிய ரீதியில், 60 சுற்றுப்புறக் காற்று தரக் கண்காணிப்பு நிலையங்களை நிறுவ திட்டமிட்டுள்ளதாக, மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.

அரச நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக, அதிகார சபைத் தலைவர் சுபுன் எஸ். பத்திரகே தெரிவித்துள்ளார்.

சுமார் ஒரு தசாப்தத்தின் பின்னர் நாட்டின் வளிமண்டலத்தில், அதிகளவான தூசுத் துகள்கள் நேற்றையதினம் படிந்ததாக மத்திய சுற்றாடல் அதிகாரச் சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: