பாலியல் இலஞ்சம் கோரும் அரச அதிகாரிகள் – ட்ரான்ஸ் பெரன்ஸி இன்டர்நெஷனல்!

Tuesday, December 10th, 2019

அரச அதிகாரிகளினால் அரசசேவைகள் வழங்கப்படும் போது அதற்குப் பிரதிபலனாகப் பாலியல் இலஞ்சம் கோரப்படும் நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்ரான்ஸ் பெரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட இலஞ்சம், ஊழல் அனுபவம் தொடர்பான கருத்துக்கணிப்பின் இறுதி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

நாட்டின் 9 மாகாணங்களையும் உள்ளடக்கியதாக 1300 பேரிடம் இந்த கருத்துக்கணிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து இவ்வருடம் ஏப்ரல் மாதம் வரையான காலப்பகுதியில் 18 – 80 வயதிற்குட்பட்ட 1300 பிரஜைகளிடம் இந்த கருத்துகணிப்பு நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று கொழும்பிலுள்ள ட்ரான்ஸ்பெரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

இதன்போது இந்த விடயம் குறித்து தகவல் வெளியிடப்பட்டது. நான்கில் ஒருபகுதியினர் அரச சேவையைப் பெற்றுக்கொள்வதற்கு அல்லது அதனைத் துரிதப்படுத்துவதற்கு இலஞ்சம் வழங்குவதாக தெரியவந்துள்ளது.

அரச அதிகாரிகளினால் அரசசேவைகள் வழங்கப்படும் போது அதற்குப் பிரதிபலனாகப் பாலியல் இலஞ்சம் கோரப்படும் நிலை காணப்படுவதாகவும் ட்ரான்ஸ்பெரன்ஸி அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts: