நவாலிப்படுகொலையின் 23வது நினைவுநாள் இன்று!

Monday, July 9th, 2018

நவாலிப் படுகொலையின் 23ஆவது நினைவுநாள் இன்றாகும்.

நவாலி சென் பிற்றஸ் தேவாலயத்தின் மீது நடத்தப்பட்ட விமானத் தாக்குதலில்  147  பலியாகிப் போன மக்களின்  23 ஆவது நினைவு நாள்  அஞ்சலி நிகழ்வுகள் நவாலி தேவாலயத்திலும், சின்ன கதிர்காமர் ஆலயத்திலும் அனுட்டிக்கப்படுகின்றது.

1995 இல் யாழ்நகர் நோக்கி முன்னேறிப்பாய்தல் நடவடிக்கையை இராணுவம் ஆரம்பித்தது. இதனால் வலிகாமம் தெற்கு, மேற்கு, வடக்கு, தென் மேற்கு பகுதி மக்களில் ஒரு தொகுதியினர் இடம்பெயர்ந்து நவாலி பகுதியில் சென்.பீற்றர்ஸ் ஆலயம், சின்னக்கதிர்காம முருகன் ஆலயம், அகிய பகுதிகளில்  தஞ்சமடைந்திருந்தனர். இதன்போது புக்காரா விமானங்கள் மேற்கொண்ட தாக்குதலில் 147 பேர் பலியாகினர்.

23வருடங்களின் முன்னர் இதே நாளில் நவாலி சென் பீற்றர்ஸ் ஆலயம், சின்னக்கதிர்காம முருகன் ஆலயம், அயலிலிருந்த வீடுகள் பலவும் முற்றாக அழிந்தன. இதில் உடனடியாகவும் காயமடைந்திருந்த நிலையில் சிலதினங்களாகவுமாக 147 மக்கள்  பலியாகிப் போயினர்.  360 பேர் வரை காயமடைந்தனர். பலர் அவயங்களை இழந்தனர்.

இந்நாளை நினைவு கூரும் மமுகமாக இன்றையதினம் நவாலி சென்பீற்றர்ஸ் ஆலயத்திலும், சின்னக்கதிர்காம முருகன் ஆலயத்திலும் விளக்கேற்றப்பட்டு, விசேட பூசை வழிபாடுகள் நடத்தப்பட்டுள்ளன.

இந்த கோரச் சம்பவம் எம் தேசத்தில் இனி ஒருதடவை ஏற்படக் கூடாது என்ற உறுதியுடன் செத்து மடிந்த அந்த 147 உறவுகளையும் நினைவேந்தி அவர்களது ஆத்ம சாந்திக்காக நாமும் பிரார்த்திப்போம்.

Related posts:

வாகன சாரதிகளுக்கு அபராதம்:  திருத்தப்பட்ட பத்திரம் சட்டமூலமாக தயாரிக்கப்பட்டுள்ளது - போக்குவரத்து அம...
தனிப்பட்ட தரவு பாதுகாப்பு சட்டமூலம் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினால் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு !
முழுமையான செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு இலகுரக வாகன சாரதி அனுமதிப்பத்திரம் - அமைச்சரவையும் அ...