பிரதமர் மஹிந்தவை வாழ்த்தியதன் மூலம் டக்ளஸின் அரசியல் நிலைப்பாடே சரியெனறு ஏற்றுக்கொண்டுள்ளார் சம்பந்தன் – வடமாகாண முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் தவராசா!

Tuesday, June 16th, 2020

பிரதமர் மகிந்த ராஜபக்ச அவர்களின்  50 ஆவது ஆண்டு அரசியல் பூர்தியியையிட்டு சம்பந்தன் ஐயா அவர்கள் மஹிந்த ராஜபக்ச அவர்களை மக்களின் நாயகனாக சித்தரித்து அறிக்கை விட்டதோடு அவரது வெற்றிகரமானதோர் அரசியல் எதிர்காலத்திற்கு வாழ்த்தக்களையும் தெரிவித்து அறிக்கைவிட்மையனதுசம்’பந்தன் ஐயாஅவர்களின் வழமையான அரசியல் கபடத்தனத்தின் மற்றுமொரு வெளிப்பாடு என வடமாகாணசபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார்.

அண்மையில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் 50 ஆவது வருட அரசியல் பிரவேச பூர்த்தியை முன்னிட்டு சம்பதன் வெளியிட்டுள்ள வழ்த்து தொடர்பில் எமது செய்திப் பிரிவு வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்

சம்பந்தன் ஐயா அவர்கள்  தனது வாழ்த்தச் செய்தியில் “தான் (மஹிந்த ராஜபக்ச) வகித்த பதவிகளிலெல்லாம் அவர் அடிப்படையில் மக்களின் ஒரு நாயகனாகவே திகழ்ந்தார். மக்கள் அவரரை மதித்தார்கள். அவர் மக்களை மதித்தார். அவர் மக்களுக்கு ஒரு மாபெரும் சக்தியாக விழங்கினார்.

மறுபுறத்தில் மக்களே அவரது பெரும் சக்தியாக விழங்கினர். இதுவே எந்தவொரு அரசியல் தலைரவரினதும் பலம் மிக்க பண்பாகும்.

மஹிந்த ராஜபக்சவிடம் அப்பண்பு மிகப் பெருமளவில் நிறைந்து காணப்பட்டது. அதுவே அவரது அரசியல் வெற்றிக்கு திறவுகோலாக திகழ்ந்தது. இது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியதொன்று”

மேலும் அவரதுவாழ்துச் செய்தியில் ‘இலங்கை மக்களின் சார்பாக குறிப்பாக நாடாளுமன்றில் நான் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் மக்களின் சார்பாக அவருக்கு உளமான வாழ்த்துக்களையும் வெற்றிகரமானதோர் அரசியல் எதிர்காலத்திற்கான எமது நல் வாழ்த்துக்களையும் நான் தெரிவித்துக் கொள்கின்றேன் என குறிப்பிட்டிருந்தார்.

அப்படியாயின் 2010, 2015 மற்றும் 2019 ஆண்டுகளில் நடைபெற்ற  ஜனாதிபதி தேர்தல்களின் போது சம்பந்தன் ஐயாவும் அவரது அந்த வாழ்த்தச் செய்தியை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்ட தமிழ்ட தேசிய கூட்டமைப்பினரும், இதேபோன்ற செய்திகளை அன்றும் தேர்தல் பிரசாரங்களின்போது கூறியிருப்பார்களேயாயிருந்தால் சம்பந்தன் ஐயாவும் கூட்டமைப்பினரும் ஒரே கொள்கையுடையவர்கள் என்று கருதியிருக்கலாம்.

ஆனால் காலத்திற்குக் காலம் பச்சோந்திகள் போன்று அறிக்கை விடுவது சம்பந்தன் ஐயாவின் அரசியல் முதிர்ச்சிக்கும் அனுபவத்திற்கும் ஏற்புடையதாக  இல்லை..

கடந்த தேர்தல்களின் போது மஹிந்த ராஜபகச் அவர்களை வசைபாடித் திரிந்தவர்கள் கூட்டமைப்பின் பிரதிநிதிகள். அப்படியாயின் தற்போது சம்பந்தன் ஐயாவின் இந்தப் புகழ் பாடலை அவர்கள்  ஏற்றுக்கொள்கின்றார்களா?

அவர்களது மொனம் ஏற்றுக்கொண்டதாகவே கருதவேண்டியுள்ளது. அரசியலில் இராஜதந்திரம் இருக்கலாம் ஆனால் கபடத்தனம் இருக்கக் கூடாது .

உதாரணமாக டக்ளஸ் தேவானந்தா அவர்கள் புலிகளுடனான யுத்தத்தின் உச்சகட்ட காலத்தில் புலிகள் தொடர்பாக என்ன கருத்தை சொல்லியிருந்தாரோ இன்றுவரை அதேநிலைப் பாட்டைத்தான் வெளிப்படையாக கூறிவருகின்றார்.

தேர்தல் காலங்களில் மக்களின் வாக்குகளை அபகரிப்பதற்காக அவர் காலத்திற்கக் காலம் குத்துக்கரணம் அடித்து கருத்துக்களை வெளியிட்டு கொள்கையை மாற்றியது கிடையாது. இதுவே டக்ளஸ் தேவானந்தாவின் அரசியலின் நேர்மைத்துவத்தக்கான ஓர் உதாரணம்.

அந்தவகையில் இன்று சம்பந்தன் ஐயாவும் டக்ளஸ் தேவானந்தா முன்னெடுக்கும் அரசியலே நடைமுறைக்கு சாத்தியமானதென காலம் கடந்தாவதேனும் ஏற்றுக்கொண்டுள்ளார்  என்பதே உண்மை.

Related posts: