வறுமையுடன் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே எனது நோக்கம் – மன்னார் மாவட்டத்தின் புதிய அரச அதிபர் நந்தினி ஸ்ரான்லி டிமெல் உறுதி!

Monday, November 16th, 2020

மன்னார் மாவட்டத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, மாவட்டத்தில் நிலையான அபிவிருத்தியை ஏற்படுத்துவதோடு, இன மத நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதே எனது மிக முக்கிய நோக்கமாக உள்ளது என மன்னார் மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக இன்றைய தினம் திங்கட்கிழமை காலை பதவியேற்ற மாவட்ட அரசாங்க அதிபர்  நந்தினி ஸ்ரான்லி டிமெல் தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்ட புதிய அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்ட திருமதி நந்தினி ஸ்ரான்லி டி மேல் இன்றையதினம்) காலை தனது கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதன்போது உரையாற்றிய அவர், மன்னார் மாவட்டம் பின் தங்கிய மாவட்டமாக உள்ளது. இந்த மாவட்டத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்ற நோக்குடன் என்னை மன்னார் மாவட்ட அரசாங்க அதிகராக நியமித்த அனைத்து உயர் அதிகாரிகளுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.

இந்த மாவட்டத்தின் சகல துறை சார் அனுபவங்களையும் ஏற்கனவே கொண்டுள்ளேன் என்ற அடிப்படையில், இந்த மாவட்டத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, மாவட்டத்தில் நிலையான அபிவிருத்தியை ஏற்படுத்துவதோடு, இன மத நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதே எனது மிக முக்கிய நோக்கமாக உள்ளது.

இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு இங்கு கடமையாற்றுகின்ற சகல மதத்தலைவர்கள் , திணைக்களத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், அனைத்து அதிகாரிகள், அரச,அரச சார்பற்ற நிறுவனங்களின் பணியாளர்கள் ஆகியோரது மேலான ஒத்துழைப்பினை நான் எதிர் பார்த்துள்ளேன்.

நிச்சையமாக  அனைவரது ஒத்துழைப்புடனும் என்னுடைய பதவிக் காலப்பகுதியில் மன்னார் மாவட்டம் முன்னேற்றம் அடையும் என்கின்ற மிகுந்த நம்பிக்கையினை கொண்டுள்ளேன்” என தெரிவித்தார்.

Related posts:

நல்லூர் பிரதேசத்தை சேர்ந்த மாற்றுத் திறனாளி ஒருவருக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரால் சக்கர நாற்கால...
பாதுகாப்பு குறித்த விடயங்களில் இந்தியாவுக்கே முதலிடம் - இலங்கையின் புதிய வெளிவிவகார செயலாளர் அட்மிரல...
பணவீக்க சூழ்நிலையில் இருந்து விடுபட கடுமையான தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளது - மத்திய வங்கி ஆளுநர...