வறட்சியுடன் கூடிய காலநிலை – நீரை சிக்கமாக பயன்படுத்துமாறு பொது மக்களுக்கு நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவுறுத்தல்!
Wednesday, January 26th, 2022
நீரை மிகவும் சிக்கனமாக பயன்படுத்துமாறு நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
தற்சமயம் நிலவும் வரட்சியுடன் கூடிய காலநிலையினால் நீர் மூலங்களின் நீர் மட்டம் குறைவடைந்துவருகிறது.
அதேநேரம் மக்களின் நீர் பயன்பாடும் தற்சமயம் அதிகரித்திருப்பதாகவும் நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
இதனிடையே வாகனங்களை கழுவுவதற்கும் வீட்டுத் தோட்டங்களுக்காகவும் நீரை பயன்படுத்த வேண்டாம் என்றும் அத்தியாவசிய காரணங்களுக்காக மாத்திரமே நீரைப் பயன்படுததுமாறும் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது.
தற்சமயம் நிலவும் வரட்சியுடன் கூடிய காலநிலையினால், மேட்டுநிலப் பிரதேசங்களுக்கான நீர்விநியோகம் தற்சமயம் குறைந்த அழுத்தத்தில் இடம்பெறுவதாகவும் நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது..
000
Related posts:
மூன்றில் இரண்டு பெரும்பான்மை உறுதி – பிரதமர் மஹிந்த ராஜபக்ச!
இலங்கை 200 ரூபாவை கடந்த அமெரிக்க டொலரின் பெறுமதி!
நாட்டின் சில பிரதேசங்களில் மழை பெய்யும் சாத்தியம் – வளிமண்டலவியல் திணைக்களம்!
|
|
|


