இலங்கை 200 ரூபாவை கடந்த அமெரிக்க டொலரின் பெறுமதி!
Saturday, January 23rd, 2021
இலங்கை ரூபாய் மீதான அழுத்தம் மீண்டும் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அத்துடன் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்றைய தினம் மேலும் அதிகரித்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் நாணய மாற்று வீதத்திற்ககமைய இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 194.31 ரூபாயாக பதிவாகியுள்ளது. கொள்வனவு விலை 199.18 ஆக பதிவாகி உள்ளது.
எனினும் இலங்கை வர்த்தக வங்கிகள் சிலவற்றின் நாணய மாற்று வீதத்திற்கமைய ரூபாய் ஒன்றின் விற்பனை விலை 200 ரூபாயாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நாட்டின் கல்வித்துறையில் மாற்றங்களை ஏற்படுத்துவோம் – ஜனாதிபதி!
ஏமாற்று அரசியலுக்கு தமிழ் மக்கள் எடுபட மாட்டார்கள் - வடக்கின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா...
நாடளாவிய ரீதியாக 19 ஆயிரத்து 641 சுற்றி வளைப்புக்கள்- 61 மில்லியன் ரூபா வருமானம் என மதுவரித் திணைக்...
|
|
|


