வறட்சியான காலநிலையால் மின் உற்பத்தி பாதிப்பு!

Tuesday, February 20th, 2018

நாட்டில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலையால் நீர் மின்உற்பத்தி சவால்களை எதிர்கொள்ளக்கூடும் என்று மின்சக்தி மற்றும் நிலைபேறா எரிசக்தி அமைச்சுதெரிவித்துள்ளது.

இதனால் பொதுமக்கள் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு அமைச்சின் அபிவிருத்தி பிரிவுப் பணிப்பாளர் சுலக்ஸன ஜயவர்த்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

மழையற்ற காலநிலையினால் முக்கிய மின்உற்பத்தி நீர்த்தேக்க பகுதிகள் மற்றும் சிறிய நீர்மின் உற்பத்தி நிலையங்களுக்கும் தாக்கம் ஏற்பட்டுள்ளது. தேசிய மின்சாரவலைப்பின்னலுக்கு 1725 மெஹாவேட்ற்ஸ் மின்சாரம் முக்கிய மற்றும் சிறிய நீர் மின்உற்பத்தியின் மூலம் ஒன்றிணைக்கப்படுகின்றது.

மேலும் காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் 58.7 வீதமாகவும், மவுசகலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 63.1 சதவீதமாகவும் கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 35.4சதவீதமாகவும், விக்டோரியா நீர்மட்டம் 21.3 சதவீதமாகவும் , ரந்தனிகல நீர்த்தேக்கம் 48.9 சதவீதமாகவும் காணப்படுகின்றது.

Related posts: