குறைந்த விலையில் இறக்குமதி செய்யும் பொருட்களை விற்க தடை -பிரதமர்

Friday, May 26th, 2017

குறைந்த விலையில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களை இலங்கையில் விற்பனை செய்வதற்கு தடை விதிக்கும் வகையிலான சட்டமொன்றை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கடவத்தை பிரதேசத்தில் புதிய தொழிற்சாலையொன்றை திறந்து வைத்து உரையாற்றியபோதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த பிரதமர், “குறைந்த விலையில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களை இலங்கையில் விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் புதிய சட்டமொன்று கொண்டுவரப்படும்.

ஏற்றுமதி நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு இயந்திரங்களை பெற்றுக்கொள்வதற்கு வரி விலக்கு பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்றுமதியின் மூலம் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கே நாம் முயற்சித்து வருகின்றோம். தேசிய உற்பத்திகளுக்கு மாறாக சர்வதேச முதலீட்டாளர்களுக்கு உற்பத்திகளில் முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுக்கிறோம்.

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை இலங்கைக்கு கிடைத்தது மட்டுமன்றி சீனா, ஜப்பான், இந்தியா போன்ற நாடுகள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள முன்வந்துள்ள நிலையில், நாட்டில் புதிய யுகம் ஏற்படுத்தப்பட்டுள்ளதுஎன்றார்.

Related posts: