பயணச்சீட்டு இன்றி பயணித்த 1163 பேர் கைது – புகையிரத பாதுகாப்பு அதிகாரி அனுர பிரேமரத்ன!

Tuesday, October 2nd, 2018

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த வருடத்தில் பயணச்சீட்டு இன்றி பயணித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், பயணச்சீட்டு பரிசீலனை செய்யும் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக, புகையிரத பாதுகாப்பு அதிகாரி அனுர பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில், பயணச்சீட்டு இன்றி புகையிரதத்தில் பயணித்த 1,163 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன்,

அவர்களிடமிருந்து, 36,11,293 ரூபா தண்டப்பணமாக அறவிடப்பட்டுள்ளதாக புகையிரத பாதுகாப்பு அதிகாரி அனுர பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அனுமதியின்றி புகையிரதத்தில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்ட 146 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மூன்றாவது வகுப்பிற்கான பயணச்சீட்டினைப் பெற்று, இரண்டாம் வகுப்பில் பயணித்த 41 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பத்வர்களிடமிருந்து 1,25,425 ரூபா தண்டப்பணம் அறவிட்டுள்ளதாக புகையிரத பாதுகாப்பு அதிகாரி அனுர பிரேமரத்ன மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts:

கால்நடைகளின்  பாதுகாப்பை கருத்தில் கொண்டு தகுந்த நீர்வு எட்டப்படும் - வேலணை பிரதேச சபை தவிசாளர் கருண...
திலீபனின் நினைவுகள் அரசியல் சுயலாபங்களுக்காகவே பயன்படுத்தப்படுகின்றது - சபையை புறக்கணித்து ஈ.பி.டி.ப...
நாட்டில் நிலவும் வரட்சியான நிலை இன்றிலிருந்து மாற்றம் - கிழக்கு, வடக்கு மாகாணங்களில் மழை பெய்யும் என...