அரிசிக்கு கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க தீர்மானம்!
Thursday, December 21st, 2017
நாட்டரிசிக்கு கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க வாழ்க்கைச் செலவு குழு தீர்மானித்துள்ளது. சந்தையில் அரிசியின் விலை அதிகரித்துச் செல்கின்றமை தொடர்பில் கூடிய வாழ்க்கைச் செலவு குழு கலந்துரையாடியபோது, நாட்டரிசிக்கு கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சந்தையில் அதிகளவில் நுகர்வு செய்யப்படும் நாட்டரிசி உள்ளிட்ட அரிசி வகைகளின் விலைகள் அதிகரித்து காணப்படுகின்றன.
இதனால் இறக்குமதி செய்யப்படும் மற்றும் உள்நாட்டு நாட்டரிசிக்கு கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க நேற்றைய கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டதாக வாழ்க்கைச் செலவு குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
Related posts:
புதிய கல்விச்சீர்திருத்தத்தை அடிப்படையாகக்கொண்டு ஆசிரிய ஆலோசகர் சேவைக்குள் மொத்தமாக 20 பாடங்கள் உள்வ...
ஜனாதிபதியின் கோரிக்கைக்கு அதிகளவிலான கவனம் செலுத்தியே, இந்திய அரசாங்கம் இலங்கைக்கு கொவிட் தடுப்பூசிக...
கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் சிறிதளவு அதிகரித்த போதிலும், கடந்த ஒக்டோபரில் நிலவிய நெரிசல் குறைந்துள்ளத...
|
|
|


