கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் சிறிதளவு அதிகரித்த போதிலும், கடந்த ஒக்டோபரில் நிலவிய நெரிசல் குறைந்துள்ளது – குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தகவல்!

Thursday, December 23rd, 2021

கடவுச்சீட்டு தலைமையகத்தில் வழங்கப்படும் கடவுச்சீட்டு தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது.

பத்தரமுல்ல தலைமையகத்தின் ஒரு நாள் சேவை ஊடாக நாளாந்தம் ஏறத்தாள 1200 கடவுச்சீட்டுகள் வழங்கப்படுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஒரு நாள் சேவைக்கு தினசரி சராசரியாக 1,000 விண்ணப்பங்கள் வருவதாக குறித்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் சிறிதளவு அதிகரித்த போதிலும், கடந்த ஒக்டோபரில் நிலவிய நெரிசல் தற்போது குறைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தலைமை அலுவலகத்தில் நாள் ஒன்றுக்கு சாதாரண சேவைக்கு 800 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது.

மேலும் திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்யாமல் பொதுமக்கள் சேவைகளைப் பெற வாய்ப்புகள் உள்ளதென அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

சேதன உள்ளீடுகளை ஊக்குவிக்கும் பசுமை விவசாய மாதிரி வீட்டுத் தோட்டம் யாழ்ப்பாணத்தில் வைபவ ரீதியாக முன்...
தனியார்துறை ஊழியர்களுக்கான இழப்பீட்டுத் தொகையை 20 இலட்சமாக அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் - தொழில் அ...
எதிர்வரும் 31 ஆம் திகதியில் இருந்து நிரந்தரமாக மூடப்படுகின்றது கொழும்பில் உள்ள நோர்வே தூதரகம் !

பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் குறித்து பொது பாதுகாப்பு அமைச்சர் அறிவிப்பு !
பொதுப்போக்குவரத்துகளில் மட்டுப்பாடு - அலுவலக அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு புகையிரதங்களில் பயணிக்க அ...
போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கு முன்மொழிவுகளையும் கருத்துக்களையும் அனுப்பிவைப்பதற்கு பொதுமக்கள...