பொதுப்போக்குவரத்துகளில் மட்டுப்பாடு – அலுவலக அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு புகையிரதங்களில் பயணிக்க அனுமதி மறுப்பு!

Wednesday, August 11th, 2021

அலுவலக அடையாள அட்டை அல்லது உரிய ஆவணங்கள் இல்லாதவர்கள் மாகாணங்களுக்கு இடையேயான புகையிரத சேவைகளைப் பயன்படுத்த முடியாது என குறித்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் குறித்த ஆவணங்களை எந்த நேரத்திலும் பரிசோதனை செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு ரயில்வே ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் புகையிரத பொதுமுகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

எவ்வாறிருப்பினும் வேலைக்கு செல்வோருக்கான புகையிரத பயணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை

மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் மேலும் இறுக்கமாக்கப்பட்டுள்ள நிலையில், பொதுப்போக்குவரத்து சேவைகள் மட்டுப்படுத்தப்படுள்ளன.

இதற்கமைய, தனியார்துறை பேருந்துகள், அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரம், மாகாணங்களுக்கு இடையில் முன்னெடுக்கப்படுகின்றன.

அத்துடன், மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவைகள் 40 வீதம் வரையில் குறைக்கப்பட்டுள்ளன.

இதேநேரம், இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து சேவைகளும், அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அதன் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார். இதேநேரம், கடமைகளுக்காக செல்பவர்கள் மாத்திரம், மாகாணங்களுக்கு இடையிலான தொடருந்து சேவைகளில் பயணிக்க முடியும் என தொடருந்து திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: